சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் ஆகியோர் நடிப்பில் நாளை (டிச 5) திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படம் புஷ்பா 2 - தி ரூல். இப்படம் சுமார் 12 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Pushpa 2 The Rule: Allu Arjun-starrer crosses Rs 100 crore mark in advance bookings; overtakes RRR, KGF 2, Baahubali 2
ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம், டிக்கெட் முன்பதிவில் ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் டிக்கெட் முன்பதிவின் மூலம் ரூ. 100 கோடி வசூலித்த இரண்டாவாது படம் இதுவாகும். முன்னதாக பிரபாஸ் நடிப்பில் வெளியான கல்கி 2898 AD திரைப்படம் டிக்கெட் முன்பதிவில் ரூ. 100 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் டிக்கெட் முன்பதிவு விற்பனையில் பாகுபலி 2 மற்றும் கேஜிஎஃப் 2 படங்களின் சாதனையை புஷ்பா 2 முறியடித்துள்ளது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை படத்தின் தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ், தங்களது சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
அதனடிப்படையில், அல்லு அர்ஜுன் படங்களில் விற்பனைக்கு முன்பாகவே அதிகளவு வசூல் செய்த திரைப்படமாக புஷ்பா 2 தி ரூல் அமைந்துள்ளது. முன்னதாக இப்படத்தின் முதல் பாகம் ரூ. 64 கோடி வசூலித்ததே அவரது படங்களில் அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய திரையுலகில் புஷ்பா 2 - தி ரூல் படம், வசூல் சாதனை படைக்கும் என சினிமா ஆர்வலர்கள் கணித்துள்ளனர். முதல் நாளில் இந்திய அளவில் இப்படம் ரூ. 200 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் இதன் வசூல் முதல் நாளில் ரூ. 300 கோடி வரை செல்லலாம் எனவும் கருதப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“