Advertisment
Presenting Partner
Desktop GIF

அல்லு அர்ஜுன், ஃபஹத் பாசில் நடிப்பில் அழுத்தம்: ஆனால் திரைக்கதை எப்படி? புஷ்பா 2 விமர்சனம்!

படம் முழுவதும், அல்லு அர்ஜுன் மற்றும் ஃபஹத் பாசில் ஒருவரையொருவர் வீழ்த்த தொடர்ந்து முயற்சி செய்தாலும், தரத்தில் எந்த குறையும் இல்லாமல் சிறந்த நடிப்பை வழங்குகிறார்கள்.

author-image
WebDesk
New Update
Pushpa 2 Allu

தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பான் இந்தியா இன்று வெளியாகியுள்ளது. இந்த படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?

Advertisment

Read In English: Pushpa 2 The Rule movie review: Allu Arjun, Fahadh Faasil film chokes under the weight of performance pressure

ஒரு திரைப்படம் தேசிய அளவில் பரபரப்பாக மாறுவதற்கும், தேசிய அளவில் பரபரப்பாக அமைப்பதற்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. இரண்டையும் வேறுபடுத்துவதற்கான எளிய வழி படத்தின் கதை சொல்லும் நேர்மைதான். ஒரு திரைப்படம் எவ்வளவு உண்மையானதாக உணர வைக்கிறது, தயாரிப்பாளர்கள் அதன் கதை மற்றும் அவர்கள் உருவாக்கிய உலகத்திற்காக எவ்வளவு ஆழமாக அர்ப்பணித்துள்ளனர்  என்பதை பொருத்து அமையும்.

இதற்கு முன்பு தெலுங்கில் வெளியான பாகுபலி 2 மற்றும் கேஜிஎஃப் 2 முதல் கங்குவா, கோட் மற்றும் தேவரா: பார்ட் 1 வரை, பல படங்கள் தனது கதைக்காக தனித்து நிற்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டன. இதில் பாகுபலி கேஜி.எஃப் படங்கள் பெரிய வரவேற்பை பெற்று இன்றும் பேசப்படக்கூடிய படங்களின் வரிசையில் முன்னணியில் இருக்கிறது. ஆனால் ஒரு சில படங்கள், முயற்சியில் தோல்வியை சந்தித்து வருகின்றன.

Advertisment
Advertisement

முதல் பாகத்தை பிளாக்பஸ்டர் மற்றும் ரசிகர்களின் விருப்பமானதாக மாற்றியதை திரைப்பட இயக்குனர்கள் பலரும் 2-ம் பாகத்தை அவ்வளவு சரியான திரைக்கதையில் அமைக்க தவறிவிடுகின்றனர். திரைக்கதையில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக பிரம்மாண்டத்தில் கவனம் செலுத்தி கதையில், தவறிவிடுகின்றனர். அதேபோல் ரசிகர்கள் தங்கள் படங்கள் குறித்து சொல்லும் கருத்துக்களை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. இதனால் முதல் பாகத்தை போன்று 2-ம் பாகம் பல படங்களுக்கு அவ்வளவாக எடுபடவில்லை என்று சொல்லலாம்.

இயக்குனர் சுகுமாரின் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ஃபஹத் ஃபாசில் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த புஷ்பா: தி ரைஸ் (2021) திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள புஷ்பா 2: தி ரூல் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. புஷ்பாவிடம் எல்லாமே உண்டு, சிலவற்றைத் தவிர என்ற தலைப்புப் பாடலின் வசனம் படத்தின் கதை மற்றும் திரைக்கதை குறித்து உணர்த்தியுள்ளது. இதில் புஷ்பாவிடம் இல்லாதது என்று குறிப்பிடப்படுவது பயம், சோகம் மற்றும் பலமான எதிரிகள் என்று சொல்லலாம். அதே சமயம், படத்தில் இருக்கும் கேரக்டர்கள் மற்றும் திரைக்கதையில் ஏதோ ஒன்று குறைவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இந்த படத்தில் அனைத்தும் பிரம்மாண்டமாக இருந்தாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்பொது குறை இருக்கிறது.

படத்தில் பெரிய ஆக்‌ஷன் காட்சிகள், ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் அதிக தருணங்கள் மற்றும் இன்னும் அதிக அனல் பறக்கும் டைலாக்கள்  உள்ளன. ஆனால் இவை அனைத்தையும் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. புஷ்பா 2 பெரும்பாலான "பான்-இந்தியன்" படங்களை விட மறுக்கமுடியாத அளவிற்கு சிறந்தது என்றாலும், அதன் மிகைப்படுத்தும் காட்சிகள் பாதிப்பை தருகிறது. ஆரம்பத்தில் இருந்தே இந்த படம் பிரம்மாண்டமாக அனைவரின் கவனத்தை ஈர்க்கும் என்று இயக்குனர் சுகுமார் கூறியிருந்தாா.

இருப்பினும், இந்த பெரிய சம்பவங்கள் கதையில் சீராக இணைக்கப்படாததால், அவரது முயற்சிகள் பெரும்பாலும் சிதைந்துள்ளன. இப்போது புஷ்பா "பான்-இந்தியன்" அந்தஸ்தை அடைந்துவிட்டதால், சுகுமார் அவரையும் திரைப்படத்தையும் "சர்வதேச" அளவில் என்று காட்டுவதற்கான வித்தைகளை அறிமுகப்படுத்துகிறார். ஜப்பானிய துறைமுகத்தில் சண்டையிடுவது போல தொடங்கும் படத்தில், புஷ்பா துபாயில் சாதாரணமாக ஹெலிகாப்டர் வாங்குகிறார், மேலும் அவர் சர்வதேச எல்லைகளைக் கடந்து இலங்கைக்கு வருகிறார்.

புஷ்பா முதல் பாகம் எளிய மனிதனின் வாழ்க்கையை கூறுவதாக இருந்தாலும், புஷ்பா 2 தன்னை அதிகமாக மிகைப்படுத்தி காட்டுவதாக உணர்த்துகிறது. இந்த ஆடம்பரமான தருணங்களை முதல் பாகத்துடன் இணைக்க சுகுமார் போராடி வருகிறார். புஷ்பாவின் மிக அழுத்தமான அம்சங்களில் ஒன்று, அந்தக் கதாபாத்திரம் எவ்வளவு தொடர்புபடுத்தக்கூடியதாக இருந்தது என்பதுதான். புஷ்பா ராக்கி பாய், சாலார் அல்லது பாகுபலி போன்ற மனிதாபிமானமற்ற நபர் அல்ல. மாறாக, அவர் பன்முக திறமை கொண்ட ஒரு கேரக்டர்.

தி ரைஸில், இந்த சார்புத்தன்மை அவரது ஆளுமைக்கு செழுமை சேர்த்தது; இருப்பினும், புஷ்பா: தி ரூலில், அவர் ஒரு பிராண்ட் என்ற சொல்வது சுமையாக இருக்கிறது. கதை ஆரம்பத்தில் புஷ்பா மற்றும் எஸ்பி பன்வர் சிங் ஷெகாவத் ஐபிஎஸ் (ஃபஹத் பாசில்) இடையே ஒரு புதிரான மோதலை அமைத்தாலும், இறுதியில் ஒரு பெரிய மோதலை கிண்டல் செய்யும் வகையில் காட்சிகள் இருக்கிறது. இந்த நம்பிக்கைக்குரிய போட்டி படத்தின் கவனம் ஈர்க்க போதுமானதாக இல்லை.

அல்லு அர்ஜுன் மற்றும் ஃபஹத் ஃபாசில் இடையேயான நட்சத்திர நடிப்பு மற்றும் இவர்கள் இடையேயான கெமிஸ்ட்ரி, இங்கு மீண்டும் திறம்பட சித்தரிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் அவர்கள் எந்த எல்லைக்கும் செல்லும் திறன் கொண்ட இரண்டு சமமான கேரக்டர்களாக உள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, புஷ்பாவிற்கும் அவரது மனைவி ஸ்ரீவள்ளிக்கும் (ரஷ்மிகா மந்தனா) இடையே உள்ள சமன்பாடு மிகவும் மோசமாக உள்ளது. ஒரு பெண் தனது பாலியல் ஆசைகளை வெளிப்படையாக வெளிப்படுத்துவதை - பாரம்பரிய விதிமுறைகளிலிருந்து விலகி - ஒரே நேரத்தில் ஸ்ரீவல்லியை ஹைப்பர்செக்ஸுவலிஸ் செய்வதன் மூலம் இந்த முன்னேற்றத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.

ரஷ்மிகாவுக்கு படத்தில் குறைவான காட்சிகளே இருந்தாலும், நிதானம் தேவைப்படும் காட்சிகளில் அவர் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆனால் மிகவும் வியத்தகு நிகழ்வுகளில் பெரும்பாலும் கார்ட்டூனிஷ் போல் உணர்கிறார். மேலும், புஷ்பாவுடன் ஜோடியாக நடித்த பிறகு, அனிமல் படத்தில் ரன்பீர் கபூர், வாரிசு படத்தில் விஜய், சரிலேரு நீகேவருவில் மேஜர் அஜய் கிருஷ்ணா, டியர் காம்ரேடில் பாபி மற்றும் கீதா கோவிந்தத்தில் விஜய் கோவிந்த் ஆகிய படங்களுக்கு பிறகு அவர் எப்போது வருவார் என்று யோசிக்காமல் இருப்பது கடினம்.

படத்தின் நீளமும் படத்திற்கு பெரும் குறையாக அமைந்துள்ளது. 200 நிமிடங்களுக்கு மேல், கதையின் நீளத்தை தக்கவைக்க சிறிய அர்த்தமுள்ள கதைக்களம் இல்லாமல், பெரும்பாலும் திணிக்கப்பட்ட காட்சிளாக இருக்கிறது புஷ்பாவும் ஷெகாவத்தும் நேருக்கு நேர் சந்திக்காதபோது, இடைவெளிகளை நிரப்ப திரும்பத் திரும்ப டைலாக் பேசிக்கொண்டு இருப்பதை நம்பியதன் மூலம் கதை சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கிறது. இடைவேளைத் தடை, காவலர்களின் சந்தனக் கட்டைகள் ஆற்றின் வழியாகத் துரத்துவது மற்றும் புஷ்பாவுக்கும் ஷேகாவத்துக்கும் இடையிலான அமைதியான சைகை தொடர்பு போன்ற தருணங்கள் சுவாரஸ்யமாக இருந்தாலும், இதுபோன்ற நிகழ்வுகள் தேவையற்ற காட்சிகள் கீழ் புதைந்து கிடக்கின்றன. இதில் இன்னும் ஏமாற்றமளிக்கும் விஷயம் என்னவென்றால், இநத பாகமே நீளம் அதிகமாக இருக்கிறது என்ற குறை எழுந்துள்ள நிலையில், படத்தின் இறுதி காட்சி, 3-வது பாகத்தின் அறிவிப்போடு முடிவடைகிறது.

மற்ற "பான்-இந்திய" ஹீரோக்களிலிருந்து அல்லு அர்ஜூனை வேறுபடுத்துவது என்னவென்றால், அவர் இயல்பாகவே ஒரு "மலர்". அவர் தனது தாயின் மீதான அன்பை வெளிப்படுத்த "ஒரு தாய் உலகின் மிகப்பெரிய போர்வீரன்" என்று அறிவிக்க வேண்டிய அவசியமில்லை; அவரது நடவடிக்கைகள் தங்களைத் தாங்களே பேசுகின்றன. அவர் தனது உணர்ச்சிகளிலிருந்து வெட்கப்படவும் இல்லை. அவரது ஒன்றுவிட்ட சகோதரர் மொல்லெட்டி மோகன் ராஜ் (அஜய்) உடன் ஒரு மனதைத் தொடும் தருணத்திற்குப் பிறகு, புஷ்பா உடைந்து ஸ்ரீவள்ளியின் கைகளில் உருகுகிறார்.

llu mha

அவரது தாய் உட்பட அவரது வீட்டில் உள்ள பெண்கள் சுழ்ந்து இருந்தனர்.  படத்தில் மிகவும் பார்வைக்கு ஈர்க்கும் ஒரு காட்சியில், புஷ்பா காளி தேவியாக, புடவை அணிந்து, இரக்கம், கோபம் மற்றும் பயம் இல்லாத ஆள் ஆகியவற்றின் சக்திவாய்ந்த கலவையை வெளிப்படுத்துகிறார். இந்த உன்னிப்பாக நடனமாடப்பட்ட வரிசை, உணர்ச்சிகள் மற்றும் செயல்களால் நிறைந்தது, மற்றபடி சீரற்ற கதையில் ஒரு அரிய வெற்றியாக நிற்கிறது.

படம் முழுவதும், அல்லு அர்ஜுன் மற்றும் ஃபஹத் ஃபாசில் ஒருவரையொருவர் வீழ்த்த முயற்சி செய்கிறார்கள், தரத்தில் எந்த குறையும் இல்லாமல் சிறந்த நடிப்பை வழங்குகிறார்கள். தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை மற்றும் ஓஎஸ்டி, சந்திரபோஸின் பாடல் வரிகள், மிரோஸ்லாவ் குபா ப்ரோஸெக்கின் ஒளிப்பதிவு ஆகியவை படத்தின் மிகப்பெரிய தொழில்நுட்ப பலம் என்பதில் சந்தேகமில்லை. மற்ற நட்சத்திரங்களின் கேமியோ தோற்றங்களை நம்பாமல் இப்படி ஒரு பிரம்மாண்டமான திரைப்படத்தை கொடுத்த சுகுமாரின் குறிப்பிடத்தக்க திறமைக்கு அங்கீகாரம் கொடுக்கலாம்.

புஷ்பாவின் உலகில் அவரது அசைக்க முடியாத நம்பிக்கை இதில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது, இருப்பினும் அவர் அதை "பான்-இந்தியன்" படமாக மாற்றுவதற்கான அழுத்தங்களை யோசிக்காமல், மற்றொரு தொடர்ச்சியை அறிவித்தார். இது சுகுமாரின் உலகம் மற்றும் நாம் அனைவரும் அதில் வாழ்கிறோம். புஷ்பா 2 இன் மிக எளிமையான மற்றும் குறுகிய விமர்சனம்: “சர்வம் புஷ்ப மயம்.”

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Allu Arjun
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment