புஷ்பா 2 தி ரூல் டீஸர்: இது அல்லு அர்ஜுன் உலகம், ஆக்ரோஷமாக காளி வேடத்தில் புஷ்ப ராஜ் ரிட்டன்ஸ்!
Pushpa 2 The Rule teaser: ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஆக்ரோஷமாக காளி அவதாரத்தில் சேலையில் வந்து மிரட்டுகிறார். இந்தத் திரைப்படம் முதல் பாகத்தைவிட மிகவும் கவர்ச்சிகரமானதாகவும், அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்ததாகவும் இருக்கிறது.
Pushpa 2 The Rule teaser: ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஆக்ரோஷமாக காளி அவதாரத்தில் சேலையில் வந்து மிரட்டுகிறார். இந்தத் திரைப்படம் முதல் பாகத்தைவிட மிகவும் கவர்ச்சிகரமானதாகவும், அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்ததாகவும் இருக்கிறது.
Pushpa 2 The Rule teaser: ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஆக்ரோஷமாக காளி அவதாரத்தில் சேலையில் வந்து அசத்துகிறார். இந்தத் திரைப்படம் அதன் முதல் பாக்கத்தைவிட மிகவும் கவர்ச்சிகரமானதாகவும், அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்ததாகவும் காட்டுகிறது.
புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் புஷ்ப ராஜ் (அல்லு அர்ஜுன்) பேசிய புகழ்பெற்ற வசனம், “புஷ்பானு பேரைக் கேட்டதும் ஃபிளவர்னு நெனச்சியா, ஃபயருடா” என்ற வசனம் நினவிருக்கிறதா? ஒருவேளை உங்களுக்கு நினைவில் இல்லை என்றால், புஷ்பா படத்தைப் பார்த்து விடுங்கள். ஏனென்றால், புஷ்பா 2: தி ரூல் டீஸர் தீப்பொறியில் இருந்து கொழுந்துவிட்டு எழும் காட்டுத்தீயாக மாறியுள்ளதைக் காட்டுகிறது. “தாக்டேலே (நான் தலைவணங்க மாட்டேன்) எந்த காரணத்திற்காகவும்.” என்ற வசனம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
Advertisements
இன்று அல்லு அர்ஜுனின் 42வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட 68 வினாடிகள் கொண்ட புஷ்பா 2: தி ரூல் டீஸர், இந்த படத்தில் புஷ்ப ராஜ் (அல்லு அர்ஜுன்) உலகத்தைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது. இதில் முந்தைய பாகத்தைவிட மிகவும் வசீகரமாகவும், அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்ததாகவும் இருக்கிறது.
புஷ்பா 2 தி ரூல் டீஸரில் அல்லு அர்ஜுன் ஆக்ரோஷமாக காளி தேவியாக உடையணிந்து, சேலையில் ஒரு திருவிழாக் காட்சியில் கோபம் துணிச்சல், சண்டை என அதிரடியாக அறிமுகமாகிறார். அப்போது அங்கே சுற்றியிருக்கும் பார்வையாளர்கள் அவரை ஆழ்ந்த மரியாதையுடன் பார்க்கிறார்கள்.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், புஷ்பா 2: தி ரூல் படத்தில் அல்லு அர்ஜுன் உடன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி மற்றும் சுனில் ஆகியோர் முதல் பாகத்தில் நடித்த அதே கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். புஷ்பா 2 தி ரூல் படத்தின் டீசர் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அதற்கு காரணம், புஷ்பா முதல் பாகத்தில் கலக்கிய அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றார். இதனால், புஷ்பா 2: தி ரூல் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
புஷ்பா 2: தி ரூல் படத்தின் டீசரைப் பார்த்த ரசிகர்கள் லைக் செய்து அல்லு அர்ஜுனின் தி பெஸ்ட் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். “அல்லு அர்ஜுன் தனது ரசிகர்களுக்கு சிறந்த பிறந்தநாள் பரிசு அளித்துள்ளார்” என்று ஒருவர் பதிவுட்டுள்ளார். மற்றொரு ரசிகர், “உண்மையான நடிப்பு” என்று பதிவிட்டுள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், சுகுமார் எழுதி இயக்கியுள், புஷ்பா 2: தி ரூல் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்தியத் திரைப்படங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மிரோஸ்லாவ் குபா ப்ரோஸெக் ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திகா ஸ்ரீனிவாஸ் மற்றும் ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புஷ்பா 2: தி ரூல் படம் ஆகஸ்ட் 15, 2024 சுதந்திர தினத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புஷ்பா தி ரைஸ் “அல்லு அர்ஜுன் தனது வலுவான நடிப்பால் படத்தில் வெற்றி நடைப் போடுகிறார். அவர் தனது டீக்லாமரைஸ் செய்யப்பட்ட தோற்றத்தால் ஒரு மறக்கமுடியாத நடிப்பை வழங்குகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“