மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் பெரிய பட்ஜெட்டில் உருவான அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்படத்தில் பகத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா, ராவ் ரமேஷ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை சுகுமார் இயக்கியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே ‘புஷ்பா’ திரைப்படம் வெளியான போது திரையரங்குகளில் மட்டும் சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்தது. அதனால் தற்போதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்த ‘புஷ்பா 2’ திரைப்படம் இன்று வெளியானதியடுத்து ரசிகர்கள் கருத்துக்களை எக்ஸ் தளத்தில் தெரிவித்து வருகின்றனர்.
எந்தவொரு இடத்திலும் குறையில்லாத தரமான படமாக புஷ்பா 2 உள்ளது என்றும் ரசிகர்களை துளியும் ஏமாற்றவில்லை என்றும் பாசிட்டிவ் விமர்சனம் சிலர் தெரிவித்து வருகின்றனர்.
புஷ்பா 2 படத்துக்கு ஓவர் ஹைப் கொடுக்கப்பட்ட நிலையில், படத்தில் ஏகப்பட்ட குறைகளும் முதல் பாதியிலேயே ரசிகர்களுக்கு சளுப்பாக உள்ளதாகவும், இரண்டாம் பாதியில் குடும்ப சென்டிமென்ட் காட்சிகள், ரம்பம் போல அறுப்பதாகவும் இந்த படம் அபவ் ஆவரேஜ் படம் தான் என்றும் தெலுங்கு ரசிகர்கள் தான் அதிகம் முட்டுக் கொடுத்து வருகின்றனர் என்றும் சிலர் தெரிவித்து உள்ளனர்.
அல்லு அர்ஜுன் கெரியரில் புஷ்பா 2 திரைப்படம் அதிகமான வசூலை பெரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், புஷ்பா 2 ஆம் பாகத்தின் விமர்சனம் மேலும் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“