Pushpa 2 Worldwide Box Office Collection Day 5: அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள புஷ்பா 2: தி ரூல் திரைப்படம் வெளியானதிலிருந்து பாக்ஸ் ஆபிஸில் வசூலைக் குவித்து வருகிறது. இந்த வசூல் இந்திய சினிமாவில் ஒரு முக்கிய வெற்றியைக் குறிக்கிறது. ஒரு விதிவிலக்கான வார இறுதி ஓட்டத்திற்குப் பிறகு, திங்கள்கிழமை புஷ்பா 2 திரைப்படம் முக்கியமான ஒரு சோதனையை எதிர்கொண்டது. சாக்நில்க் (Sacnilk) குறிப்பிட்டுள்ளபடி, திங்கட்கிழமை வசூலில் 55 சதவீதம் சரிவைக் கண்டாலும், புஷ்பா 2 திரைப்படம் ரூ.64.1 கோடியை வசூலித்தது, அதன் நிகர உள்நாட்டு வசூல் ரூ.593.1 கோடியாக இருந்தது. குறிப்பிடத்தக்க வகையில், புஷ்பா 2 அதன் தெலுங்கு படங்களை விட அதன் ஹிந்தி வசூலில் இருந்து அதிகம் சம்பாதித்துள்ளது. புஷ்பா 2 இந்தி படத்தில் இருந்து ரூ 331.7 கோடியும், புஷ்பா 2 தெலுங்கு படம் மூலம் ரூ 211.7 கோடியும் வசூலித்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: Pushpa 2 worldwide box office collection Day 5: Allu Arjun film mints over Rs 900 crore worldwide
புஷ்பா 2 தமிழ், மலையாளம் மற்றும் கன்னட பதிப்புகளில் இருந்து முறையே ரூ.34.45 கோடி, ரூ.11.2 கோடி மற்றும் ரூ.4.05 கோடியை வசூலித்துள்ளது. இந்தப் படத்தின் வசூலில் தெலுங்கு திரையரங்குகள் முழுவதும் 38.33 சதவீத இடங்களையும், அதன் ஹிந்தி திரையரங்குகளில் 40.11 சதவீத இடங்களையும் பதிவு செய்தது. புஷ்பா 2 திரைப்படம் நான்காவது நாளில், உலகம் முழுவதும் மொத்தம் ரூ 829 கோடி வசூலைக் குவித்துள்ளது. இப்போது, ஐந்தாவது நாளில் புஷ்பா 2 திரைப்படம் ரூ 900 கோடியைத் தாண்டியுள்ளது.
2024-ம் ஆண்டில் வெளியான பிரபாஸின் கல்கி கி.மு. 2898 திரைப்படம், முதல் வார முடிவில் ரூ.494.5 கோடி வசூலித்து ஒரு வாரத்தில் அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படம் என சாதனை படைத்திருந்த நிலையில், புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி வெறும் 4 நாட்களில் இந்தியாவில் ரூ.500 கோடியைத் தாண்டி புதிய சாதனை படைத்தது. தற்போதைய போக்கு தொடர்ந்தால் இன்னும் ஒரு வாரத்தில் இந்த படம் ரூ.1000 கோடி கிளப்பில் சேர வாய்ப்புள்ளது. மேலும், புஷ்பா 2 திரைப்படம் 5-வது நாளில் ரூ.900 கோடியைத் தாண்டியுள்ளதால், ஸ்ட்ரீ 2 திரைப்படத்தின் ரூ.874.58 கோடி வசூல் சாதனையை எளிதாக முறியடித்துள்ளது.
புஷ்பா 2 திரைப்படம் முதல் நாளில் பிரிவியூ ஷோ டிக்கெட் வசூல் உள்பட ரூ.174.90 கோடி என்ற வசூலுடன் தனது பாக்ஸ் ஆபிஸ் வசூல் வேட்டையைத் தொடங்கியது, வெள்ளிக்கிழமை ரூ.93.8 கோடியை வசூல் செய்தது, வார இறுதியில் சனிக்கிழமை ரூ.119.25 கோடியும், ஞாயிற்றுக்கிழமை ரூ.141.05 கோடியும் வசூலித்துள்ளது.
சுகுமார் இயக்கியுள்ள புஷ்பா 2 திரைப்படம் ஒரு செம்மரக் கடத்தல்காரன் ஒரு கடுமையான போலீஸ் அதிகாரியைக் எதிர்கொள்ளும்போது, தனது சட்டவிரோத வியாபாரத்தைத் தக்கவைக்க எதிர்கொள்ளும் சவால்களைச் சுற்றியே இந்த கதை சுழல்கிறது. படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், ஜெகபதி பாபு, ராவ் ரமேஷ், மற்றும் அனசுயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.