Advertisment
Presenting Partner
Desktop GIF

‘ஓ சொல்றியா மாமா’ வேற லெவல் எடிட்டிங்; தில்லானா மோகனம்பாள் சிவாஜி - பத்மினி டான்ஸ்

புஷ்பா திரைப்படத்தின் “ஓ… சொல்றியா மாமா…” பாடலுக்கு தில்லான மோகனம்பாள் படத்தின் சிவாஜி கணேசன் நாதஸ்வரம் வாசிக்க பத்மினி ஆடுகிற வீடியோ வேற லெவலில் இருக்கிறது.

author-image
WebDesk
New Update
Pushpa movie, O Solriya song remix Sivaji Ganesan and Padmini dance, O Solriya mama song, ஓ சொல்றியா மாமா, ஓ சொல்றியா மாமா வேற, தில்லானா மோகனம்பாள் சிவாஜி - பத்மினி டான்ஸ், Sivaji padini, Thillana Mohanambal, pushpa, allur arjun, samantha, viral video

நடிகர் அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பிரபலமான ஓ… சொல்றியா மாமா பாடல் பட்டிதொட்டியெங்கும் இளசுகளை ஆட்டம் போட வைத்து வருகிறது. இந்த பாடலுக்கு யூடியூபர்கள் தில்லானா மோகனம்பாள் திரைப்பத்தின் சிவாஜி கணேசனை வாசிக்க வைத்து பத்மினியை நடனம் ஆடுவதாக வெற லெவலில் வீடியோ எடிட் செய்து வெளிட்டுள்ளனர்.

Advertisment

தெலுங்கு சினிமா நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் புஷ்பா திரைப்படம் வெள்ளிகிழமை (டிசம்பர் 17) திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கியுள்ளார். புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூன் ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். வில்லனாக ஃபகத் பாசில் நடித்துள்ளார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

புஷ்பா படம் திரையரங்குகளில் வெளியான முதல் நாளே பாக்ஸ் ஆஃபிஸில் பெரும் தொகையை வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. ரிலீஸுக்கு முன்னதாக வெளியான புஷ்பா திரைப்படத்தின் “ஓ… சொல்றியா மாமா… ஒஓ… சொல்றியா மாமா…” பாடல் மாநிலங்களைக் கடந்து இளசுகளை ஆட்டம் போட வைத்து வருகிறது. இந்த பாடலுக்கு நடிகை சமந்தா செம மாஸ் டான்ஸ் ஆடியிருக்கிறார்.

ஒரு பிரபலமான பாடல் வெளியாகும்போது, அந்த பாடலுக்கு இதற்கு முன்பு வெளியான பிரபலமான திரைப்படங்களின் வீடியோவைப் யூடியூபர் மற்றும் நெட்டிசன்கள் கச்சிதமாக பொருத்தி எடிட் செய்து வெளியிட்டு சமூக ஊடகங்களை கலக்குவார்கள்.

அந்த வகையில் அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்று பட்டிதொட்டியெங்கும் இளசுகளை ஆட்டம் போட வைத்துக்கொண்டிருக்கும்
“ஓ… சொல்றியா மாமா… ஒஓ… சொல்றியா மாமா…” பாடலுக்கு யூடியூபர்கள் வேற லெவலில் ஒரு எடிட்டிங் செய்து தில்லானா மோகனம்பாள் சிவாஜி கணேசனையும் பத்மினியையும் ஆட வைத்துள்ளனர்.

“ஓ… சொல்றியா மாமா… ஒஓ… சொல்றியா மாமா…” பாடலுக்கு சிவாஜி கணேசனும் பத்மினியும் ஆடுகிற வீடியோ சமூக ஊடகங்களை கலக்கி வருகிறது. புஷ்பா படத்தில் சமந்தா ஆடுகிற ஆட்டத்துக்கு நிகரான வரவேற்பை எடிட் செய்யப்பட்ட சிவாஜி கணேசன் பத்மினி வீடியோ வரவேற்பு பெற்றுள்ளது. “ஓ… சொல்றியா மாமா…” பாடலுக்கு சிவாஜி கணேசன் நாதஸ்வரம் வாசிக்க பத்மினி ஆடுகிற வீடியோ வேற லெவலில் இருக்கிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Video Sivaji Ganesan Allu Arjun
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment