pushpavanam kuppusamy daughter pallavi released video - புஷ்பவனம் குப்புசாமி மகள் வீடியோ
நாட்டுப்புற இசையிலும் திரையிசையிலும் தனது தனித்துவமான குரலால் இசை ரசிகர்களைக் கவர்ந்தவர்கள் பாடகர்கள் புஷ்பவனம் குப்புசாமி – அனிதா குப்புசாமி தம்பதியர். அனிதா குப்புசாமி அதிமுகவில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டுவந்த நிலையில் கடந்த ஆண்டு அவர் அதிமுகவிலிருந்து விலகியதாக அறிவித்தார்.
Advertisment
இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா தென்னிந்திய நடிகர்கள்? ஃபோர்ப்ஸ் பட்டியல்..
பாடகர் புஷ்பவனம் குப்புசாமி தனது மனைவி அனிதா குப்புசாமியுடன் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள விஸ்வநாதன் தெருவில் வசித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். புஷ்பவனம் குப்புசாமியின் மகள் பல்லவி டாக்டருக்கு படித்துள்ளார்.
Advertisment
Advertisements
இந்த நிலையில், புஷ்பவனம் குப்புசாமியின் உறவினர் கௌசிக் என்பவர் சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் புஷ்பவனம் குப்புசாமியின் மகள் காணவில்லை என்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், பல்லவிக்கும் அவரது சகோதரிக்கும் சண்டை நடந்ததாகவும் அதனால், பல்லவி காரை எடுத்துக்கொண்டு சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவர் எங்கு சென்றார் என்ற விவரம் தெரியவில்லை. காவல்துறை பல்லவியை கண்டுபிடித்து தரவேண்டும்” என புகாரில் தெரிவித்துள்ளனர். புகாரின் பேரில் காணாமல் போன புஷ்பவனம் குப்புசாமியின் மகள் பல்லவியை தேடி வந்தனர்.
இதனிடையே, காணாமல் போனதாக கூறப்பட்ட புஷ்பவனம் குப்புசாமியின் மகள் பல்லவி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “நண்பர்களே நான் கடத்தப்பட்டதாகவோ அல்லது காணாமல் போனதாகவோ தவறான செய்திகள் பகிரப்படுகின்றன. நான் நன்றாகவே இருக்கிறேன். போலியான தகவல்களை நம்பவேண்டாம் எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், பல்லவியே ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தான் பத்திரமாக இருப்பதாகவும், ஒரு பிரச்சனையும் இல்லை, எல்லாமே வதந்திதான் என்றும் விளக்கம் அளித்துள்ளார். அந்த வீடியோவில் அவர் சொல்லி உள்ளதாவது: இனிதான் தெரியும் "எல்லாரும் பார்த்திருப்பீங்க.. நியூஸ் ஸ்பிரெட் பண்ணிட்டாங்க.. நான் காணாம போயிட்டேன்.. அம்மா, அப்பா ரெண்டு பேரும் போலீசில் கம்ப்ளைன்ட் குடுத்திருக்காங்கன்னு.. ஸோ.. இது போலியான நியூஸ்.. வதந்தி.. இது எங்கே இருந்து ஆரம்பிச்சது அப்படிங்கறதை நாங்க இன்னும் பார்த்துட்டு இருக்கோம்... இனிமேல்தான் அது என்ன, ஏதுன்னு தெரியவரும்.
அதுக்குள்ள, எங்களுக்கு நிறைய போன் கால்ஸ் வந்துடுச்சு.. மெசேஜ் வந்தது.. முடிஞ்ச வரைக்கும் நானும் அவங்களுக்கு ரிப்ளை பண்ணிட்டு இருக்கேன். ஒரு டைம்ல என் போனே ஸ்விட்ச் ஆப் ஆயிடுச்சு சார்ஜ் இல்லாமல்.. இப்பவும் நான் எங்க வீட்டுலதான் இருக்கேன்..
நொந்து போய் உள்ளேன் அப்பா முதல்ல ஊர்லயே இல்லை.. 2 மணி நேரத்துக்கு முன்னாடிதான் ஊர்ல இருந்து வந்தாரு.. அப்படி இருக்கும்போது, அப்பா எப்படி நேத்து நைட் கம்ப்ளைன்ட் தந்தாருன்னு சொல்றாங்க எனக்கு தெரியல. ஊர்லயே இல்லாத ஒரு மனுஷன் கம்ப்ளைன்ட் தந்த மாதிரி சொல்லி இருக்காங்க.. நான் இதனால் மனசு உடைஞ்சு போயிருக்கேன்.
நல்லா இருக்கேன் நீங்க என்னை இப்போ பார்க்கறீங்க.. நார்மலா இருக்கேன்.. நல்லா இருக்கேன்.. இந்த போலி செய்தியை மட்டும் பரப்பாம, பதறாம இருங்க.. எனக்கு போன் பண்ணி கேட்ட, மெசேஜ் அனுப்பி கேட்ட எல்லாருக்கும் ,,ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்" என்று தன்னை பற்றி பரவி வரும் வதந்திகளுக்கு பல்லவியே முற்றுப்புள்ளி வைத்து தெளிவுபடுத்தி உள்ளார்.