New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/01/Putham-Pudhu-Kaalai-Vidiyaadhaa.jpg)
Putham Pudhu Kaalai Vidiyaadhaa trailer goes viral on social media
புத்தம் புது காலை விடியாதா ஜனவரி 14 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது.
Putham Pudhu Kaalai Vidiyaadhaa trailer goes viral on social media
அமேசான் பிரைம் வீடியோ, வரவிருக்கும் ’புத்தம் புது காலை விடியாதா’ படத்தின் ட்ரெய்லரை செவ்வாயன்று வெளியிட்டது. இது அதன் 2020 ஆந்தாலஜி தொடரின் இரண்டாவது பாகம் ஆகும்.
புத்தம் புது காலை மொத்தம் ஐந்து குறும்படங்களின் தொகுப்பை கொண்டிருந்தது, அவை தமிழ் சினிமாவின் சில முன்னணி இயக்குனர்களால் இயக்கப்பட்டன. லாக்டவுன் அனைவரையும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்லவும், அவர்களை குடும்ப உறுப்பினர்களுடன் பிணைக்கவும் எப்படி கட்டாயப்படுத்தியது என்பது பற்றிய யோசனையை படம் முக்கியமாக வெளிப்படுத்தியது.
தற்போது வெளியான, புத்தம் புது காலை விடியாதா ட்ரெய்லரைப் பார்க்கும்போது, இதுவும் ஐந்து பாகங்கள் கொண்ட ஒரு தொடராகும், இது தொற்றுநோய்களின் நடுவில், மக்கள் இயல்புநிலையைக் கண்டறிந்து தங்கள் சொந்த விதிமுறைகளில் வாழ முயற்சிப்பது பற்றியது.
கொரோனா நோய்த்தொற்றுகளின் இரண்டாவது அலையின் பின்னணியில் இந்த தொகுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்கள் தனிமையில் இருப்பதைப் போலவும், சக மனிதர்களுடன் மீண்டும் இணைவதற்கு அவர்கள் தங்கள் வசம் உள்ள அனைத்தையும் பயன்படுத்துவதாகவும் படம் உள்ளது. படத்தில் உள்ளார்ந்த மென்மை மற்றும் திடமான உணர்வு-நல்ல அம்சம் இருப்பதாக தெரிகிறது.
பாலாஜி மோகன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தொகுப்பின் முதல் படத்துக்கு ’முகக்கவச முத்தம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சிறுகதையில் கௌரி கிஷன் மற்றும் டீஜே அருணாசலம் நடித்துள்ளனர்.
2வது படம் ’மௌனமே பார்வையை’ மதுமிதா இயக்கியுள்ளார், இதில் நதியா மொய்டு மற்றும் ஜோஜு ஜார்ஜ் நடித்துள்ளனர்.
3வது படத்திற்கு ’லோனர்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதை ஹலிதா ஷமீம் இயக்கியுள்ளார். லோனர்ஸ் படத்தில் ஜெய் பீம் புகழ் லிஜோமோல் ஜோஸ் மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
அடுத்து ரிச்சர்ட் ஆண்டனி இயக்கத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, நிர்மல் பிள்ளை நடித்துள்ள படம் ‘நிழல் தரும் இதம்’ மற்றும் சனந்த் மற்றும் திலிப் சுப்பராயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் சூர்யா கிருஷ்ணா இயக்கிய ”தி மாஸ்க்” ஆகிய ஐந்து குறும்படங்கள் இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
புத்தம் புது காலையின் புதிய சீசன், புத்தம் புது காலை விடியாதா ஜனவரி 14 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.