சிம்பு மீது விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு லவ்வா? மேடையிலியே காட்டி கொடுத்து விட்டார்!

காதல் படம் என்பது டைட்டிலியே நன்கு தெரிந்து விட்டதால் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அனைவரும் அவர்களின் காதல் பற்றி

பிரம்மாண்டமாக நடைப்பெற்ற பியார் பிரேமா காதல் படத்தின் ஆடியோ வெளியீடு விழாவில் நடிகர் சிம்பு, விஜய் சேதுபது, தனுஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில், இளன் இயக்கியிருக்கும் படம் ‘பியார் பிரேமா காதல்’. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாணும், ரைசா வில்சனும் இப்படத்தில் கதாநாயகன், கதாநாயகியாக நடித்துள்ளனர்.முழு நீள காதல் படமான இதற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையின் நடைபெற்றது. இதில் இசைஞானி இளையராஜா, இயக்குனர்கள் சீனுராமசாமி, அமீர், ராம் ஜிவி. பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சமீபத்தில் வெளியான ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் ட்ரெய்லர் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றிருந்தது. இந்நிலையில் படத்தின் பாடல் வெளியீடு குறித்த எதிர்ப்பார்பு ரசிகர்களிடம் இருமடங்கு அதிகரித்தது. அதனை பூர்த்தி செய்யும் வகையில் படத்தின் இசை வெளியீட்டு சுவரசியமான பல சம்பவங்கள் அரங்கேறின.

நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் வருகை தந்திருந்தார். அவரைத் தவிர நடிகர் விஜய்சேதுபதி, சிம்பு ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர். வழக்கம் போல் விழாவை கலகலப்பாக மாற்ற தொகுப்பாளர் மகேஸ்வரி விஜய்சேதுபதியிடம்
‘இப்போ நான்தான் நீங்க புரப்போஸ் பண்ற பொண்ணு. எங்கே… ப்ரபோஸ் பண்ணுங்க?’ என்று கேட்க பயந்து போன விஜய் சேதுபதி உடனே பாருங்க என் தலைவன், அங்க இருக்கான பாருங்க.. உங்களோட இந்த வம்பு தும்புக்கெல்லாம் அவன்தான் சரியான ஆளு என்று சிம்புவை கைக்காட்டி கோத்து விடுகிறார்.

உடனே அரங்கத்தில் இருந்த அனைவரும் ஆரவாரம் செய்து விசில் அடித்தனர். அதன் பின்பு நடிகர் சிம்புவை மேடைக்கு அழைத்த தொகுப்பாளர்கள், அவரது முதல் காதல் அனுபவம் பற்றி கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த சிம்பு, “என் முதல் காதல் என் ரசிகன்தான்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், ” இது இசை வெளியீடு மாதிரி இல்லாமல் சினிமா பிரபலங்களின் கெட் டூ கெதர் மாதிரி இருக்கிறது. நானும், யுவனும் எல்லா விஷயத்திலும் ஒரே மாதிரி தான். யுவன் எனக்கு அப்பா மாதிரி, அப்பா மாதிரி என்னை பார்த்துக் கொள்வார். எதிரி கூட நல்லா இருக்கணும்னு நினைப்பவர் யுவன். அவருக்காக சேர்ந்த கூட்டம் தான் இது” என்றார்.

காதல் படம் என்பது டைட்டிலியே நன்கு தெரிந்து விட்டதால் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அனைவரும் அவர்களின் காதல் பற்றி சுவையான அனுபவங்களை பகிர்ந்க்துக் கொண்டனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close