Queen Web Series : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் முன் வந்தனர். தற்போது கங்கனா ரனாவத்தை ஹீரோயினாக வைத்து, ‘தலைவி’ என்ற படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய்யும், ‘த அயர்ன் லேடி’ என்ற படத்தை பிரியதர்ஷினியும் இயக்கி வருகிறார்கள். இதற்கிடையே இயக்குநர் கெளதம் மேனனுன், ‘கிடாரி’ இயக்குநர் பிரஷாந்த் முருகேசனும் ‘குயின்’ என்ற பெயரில் ஜெ-வின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக இயக்கியுள்ளனர்.
Advertisment
ஜெயலலிதாவின் கதையாக எடுக்கப்பட்ட இணையதள தொடருக்கு தடை கோரிக்கை..
பள்ளிப் பருவ ஜெயலலிதாவாக அனிகா சுரேந்திரன்
இள வயது ஜெயலலிதாவாக அஞ்சனா ஜெயபிரகாஷ்
ஜெயலலிதா படங்களில் நடிக்கும் போது
எம்.ஜி.ஆராக இந்திரஜித் சுகுமாரன்
முதல்வராக எம்.ஜி.ஆர் இருந்த போது
ஜெயலலிதா - எம்.ஜி.ஆர் - ஜானகி
எம்.ஜி.ஆர் மறைவு
ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன்
ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசம்
சிமி அகர்வாலின் நேர்க்காணலில் ஜெயலலிதா கலந்துக் கொண்ட போது...
குயின் வெப் சிரீஸில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் ‘சக்தி சேஷாத்ரியாக’ ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளர். ஜெயலலிதாவின் பள்ளிப் பருவத்திலிருந்து தொடங்கும் இந்த வெப் சிரீஸில் சிறு வயதில், அனிகா சுரேந்திரனும், இளவயதில் அஞ்சனா ஜெயபிரகாஷும் நடித்துள்ளனர். ஜெயலலிதாவின் வாழ்க்கையில் முக்கியமானவராகக் கருதப்படும் எம்.ஜி.ஆராக இந்திரஜித் சுகுமாரனும் நடித்துள்ளனர். ஜெயலலிதாவின் தாய் சந்தியாவாக சோனியா அகர்வால் நடித்துள்ளார்.