/tamil-ie/media/media_files/uploads/2019/12/Queen-Web-Series.jpg)
Queen Web Series
Queen Web Series : மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட வெப் சிரீஸை இயக்குநர் கெளதம் மேனன் இயக்கி வருகிறார். ’குயின்’ என்ற தலைப்பில் உருவாகியிருக்கும் இதில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். கெளதம் மேனனுடன் இணைந்து ’கிடாரி’ புகழ் பிரசாத் முருகேசனும் இதில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
தற்போது குயின் வெப் சிரீஸின் டீசர் வெளியாகியுள்ளது. டீசரில் எந்த நடிகர்களின் முகங்களையும் காட்டவில்லை. இள வயது ஜெயலலிதா பள்ளி சீருடையில் பரிசு வாங்குவதில் இருந்து இந்த டீசர் தொடங்குகிறது. பின்னர், ஒரு இளம் பெண் நடனமாடும் காட்சிகளைக் காண முடிகிறது. அப்போது “18 வயதில் சூப்பர் ஸ்டார் கதாநாயகி” என்று குறிப்பிடப்படுகிறது. பின்னர் வெள்ளை புடவை அணிந்த இளம் பெண் அரசியல் உரைகளை நிகழ்த்துவதும் நமக்குக் காட்டப்பட்டுள்ளது. இதன் ட்ரைலர் ஜெயலலிதாவின் நினைவு தினமான டிசம்பர் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“நிஜ வாழ்க்கைக் கதையைத் தவிர, வலைத் தொடரில் கற்பனையான சில கூறுகளும் இருக்கும்” என இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு சில நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் அனிகா சுரேந்திரன் இளவயது ஜெயலலிதாவாகவும், இந்திரஜித் சுகுமாரன், எம்.ஜி.ஆராகவும் நடிக்கிறார்களாம். எம்.எக்ஸ் ப்ளேயரில் வெளியிடப்படும் இந்த வெப் சிரீஸை தமிழ், தெலுங்கு, இந்தி ரசிகர்களும் கண்டுகளிக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.