/indian-express-tamil/media/media_files/2025/04/04/6jg837VCIStkyMQJDnrt.jpg)
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அலைப்பாயுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் ஆர்.மாதவனின் திரை வாழ்க்கையில், மறக்க முடியாத சில கேரக்டர்கள் மணிரத்னம் படங்களில் வந்தது. இருவரும் ஒருவரையொருவர் பற்றிப் பேசும்போது எப்போதும் வெளிப்படும் ஒரு அன்பான தோழமை உணர்வைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
ஆங்கிலத்தில் படிக்க: R Madhavan ‘offended’ Mani Ratnam when he rejected Siddharth’s role in Aayitha Ezhuthu: ‘I shaved my head, got tanned, looked unrecognisable for Inba’
மணிரத்னம் இயக்கத்தில், கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான அலைப்பாயுதே படம், மாதவனை ஒரு காதல் நாயகனாக ரசிகர்கள் மத்தியில் நிலைநிறுத்தியது. இந்த கேரக்டர் அவரது மற்ற திரைப்படங்களின் போக்கையும் தீர்மானித்தது. ஆனால் காதல் நாயகனு்ன் சேர்த்து அதிரடி நாயகன் என்ற அந்தஸ்தை மாதவனுக்கு பெற்று கொடுத்த திரைப்படம் ரன். இந்த படத்திற்கு பிறகு மாதவன் அதிரடி படங்களை தேர்வு செய்து நடித்து வந்தாலும்,மீண்டும் ஒருமுறை மாதவனின் வாழ்க்கைக்கு ஒரு வகையான திருத்தத்தை வழங்கியவர் மணிரத்னம் தான்.
மணிரத்னத்துடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்த மாதவன் அவரின் ஆயுத எழுத்து படத்தில் நடித்திருந்தார். இந்த படம் குறித்து இந்தியா டிவியிடம் பேசிய மாதவன், இந்த படத்தின் கேரக்டர் எப்படி தனது சொந்த வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தியது என்பது பற்றி பேசியிருந்தார். இந்த படத்தில் மாதவனுடன் சேர்த்து சித்தார்த், சூர்யா ஆகியோரும் நடித்திருந்தனர். இதில், மணிரத்னம், சித்தார்த் நடித்த கேரக்டரில் தான் முதலில் மாதவனை நடிக்க வைக்க அவரை அனுகியுள்ளார்.
மீண்டும் ஒரு காதலன் பையனாக நடிக்க விரும்பாத மாதவன் அந்தப் கேரக்டரை தான் நிராகரித்ததாக கூறியுள்ளார். "கதையைக் கேட்டவுடுன் இன்பா வேடத்தில் நடிக்க ஆசைப்படுவதாகச் சொன்னேன். ஏன் அந்தக் கதாபாத்திரத்தைத் தேர்வு செய்தாய் என்று கேட்டபோது, அது கதையில் சிறந்த வேடம் என்றும், மற்றவை மறந்துவிடும் என்றும் நான் வெளிப்படையாகச் சொன்னேன். நான் சொன்னதை கேட்டு அவர் கோபமடைந்தார். ஆனாலும் என்னை இன்பா வேடத்தில் நடிக்க வைக்க அவர் விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.
ஆயுத எழுத்து படம் யுவா என்ற பெயரில் இந்தியில் எடுக்கப்பட்டது. அந்த படத்தில் இன்பா கேரக்டரில் அபிஷேக் பச்சன் நடிப்பதால் அந்த கேரக்டரில் நடிக்க தனக்கு தகுதி இருப்பதாக இயக்குனர் மணிரத்னத்தை நம்ப வைக்க ஒரு மாத அவகாசம் கேட்டேன். அதன்பிறகு, "நான் என் தலைமுடியை மொட்டையடித்து, சூப்பர் டான் ஆக சன்ஸ்கிரீன் இல்லாமல் கோல்ஃப் விளையாடினேன், அதன்பிறகு நான் முற்றிலும் அடையாளம் தெரியாத ஆளாக மாறிவிட்டேன்.
அந்த தோற்றத்தில், நான் அவரது அலுவலகத்திற்குச் சென்றபோது அவரது பாதுகாவலர்கள் என்னை தடுத்து நிறுத்தவிட்டனர். ஏனெனில் அவர்களுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. நான் அவரை சந்திக்க வேண்டும் என்று சொன்னபோது, "பாதுகாப்பு அதிகாரிகள், மணி சார், யாரோ ஒருவர் அறிவிக்கப்படாமல் வீட்டிற்கு வந்ததால் சங்கடப்பட்டார். அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை நான் சிரிப்பை அடக்க முடியாமல் சிரிக்கத் தொடங்கும் வரை அது நான்தான் என்பதை அவர் கண்டுபிடிக்கவில்லை என்று மாதவன் கூறியுள்ளார்.
மணிரத்னம் சிறிது நேரம் அவரைப் பார்த்துவிட்டு, அந்த வேடத்தில் நடிக்க விரும்புகிறாரா என்று கேட்டார். "நான் ஆம் என்று சொன்னேன், இன்பாவின் பின்னணிக் கதையை மட்டும் கேட்டேன். இன்பா ஒரு கடினமான பையன், மோசமான குழந்தைப் பருவத்தைக் கொண்டவர், கிட்டத்தட்ட ஒரு மிருகத்தைப் போன்றவர் என்று மணி சார் கூறினார். தான் எப்படி அந்தக் கதாபாத்திரத்தின் தோற்றத்தில் நுழைந்தேன் என்பதை விளக்கிய மாதவன், நேஷனல் ஜியோகிராஃபிக் சேனலில் இருந்து தான் உத்வேகம் பெற்றதாகக் கூறினார்.
சிங்கக் கூட்டம் ஒரு மானை துரத்துவதை நான் பார்த்தேன். அவை துரத்தி, பாய்ந்து, மானின் தொண்டையை நெரித்து, அதை கிழித்தெறிந்தாலும் கூட, சிங்கங்கள் ஒருபோதும் கோபத்தைக் காட்டவில்லை. வன்முறைச் செயலாக இருந்தாலும், அது சிங்கத்திற்கு இன்னொரு மதிய உணவாக இருந்தது. கோபம், கோபம், உற்சாகம் எதுவும் இல்லை. சிங்கத்தின் கண்களில் முழுமையான அமைதி இருந்தது. அப்போதுதான் மணி சார் விரும்பியதை இன்பாவிடமிருந்து பெற்றேன்.
அவருடனான இந்த சினெர்ஜிதான் என்னை ஒரு நடிகராகத் தள்ளியது. குருவுக்குப் பிறகு, நாங்கள் ஒரு இடைவெளி எடுக்க முடிவு செய்தோம். எனது பெரும்பாலான வெற்றிகரமான படங்கள் மணி சாருக்குக் காரணமாக இருந்ததால், எனக்கென ஒரு பாதையை உருவாக்க விரும்பினேன்... எனது சொந்த வழியைக் கண்டறிய விரும்பினேன் என்று மாதவன் கூறியுள்ளார்.
சமீபத்தில் ஜீ5 திரைப்படமான ஹிசாப் பராபரில் நடித்த மாதவன், நெட்ஃபிளிக்ஸின் டெஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில், சித்தார்த், மீரா ஜாஸ்மின் மற்றும் நயன்தாரா ஆகியோரும் நடிக்கின்றனர். ஏப்ரல் 18 ஆம் தேதி திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் கேசரி அத்தியாயம் 2 இல் அவர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.