இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் மாதவன், இயக்குனராகவும் முத்திரை பதித்துள்ளார். சமீப காலமாக பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் மாததவன் தற்போது புதிதாக ஒரு பிரபலத்தின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க உள்ளார்.
Read In English: R Madhavan’s GD Naidu biopic titled GDN; Krishnakumar Ramakumar to helm the project
முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்த ஆர் மாதவன், , இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட, ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் மாதவன் இயக்குனராகவும் முத்திரை பதித்திருந்தார். படத்தில், இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்த வாழ்க்கை வரலாறு திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதையும் வென்றிருந்த நிலையில், தற்போது மாதவன் அடுத்த வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்காக தயாராகியுள்ளார். பிரபல கண்டுபிடிப்பாளரும் பொறியாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட படத்தில் மாதவன் ஜி.டி.நாயுடு கேரக்டரில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் டை்டில் ஜி.டி.என் என்று நேற்று (பிப்ரவரி 18) அறிவிக்கப்பட்டது.
கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கும் இந்தப் படத்தை விஜய் மூலனின் வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் மாதவன்-சரிதா மாதவனின் டிரைகலர் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்க உள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர்கள், “இந்தியாவின் எடிசன் ஜி.டி. நாயுடுவுக்கு எங்கள் அஞ்சலியின் தலைப்பை வெளியிடுகிறோம். ஜி.டி.என் - புதுமை, மீள்தன்மை மற்றும் உத்வேகத்தின் கதை என்று கூறியுள்ளனர்.
ஜி.டி. நாயுடு (கோபாலசாமி துரைசாமி நாயுடு) கோயம்புத்தூரில் பிறந்தவர். மேலும் முதல் உள்நாட்டு மின்சார மோட்டாரை உருவாக்கிய பெருமைக்குரியவர். புதிய விஷயங்களை உருவாக்குவதற்கான இடைவிடாத தேடலுக்கு பெயர் பெற்ற அவர், விவசாயம், ஜவுளி, புகைப்படம் எடுத்தல் மற்றும் ஆட்டோமொபைல் துறையில் நம்பகமான கண்டுபிடிப்புகளை செய்துள்ளார். அவர் ஒரு குறிப்பிடத்தக்க கொடையாளர் மற்றும் பாராட்டப்பட்ட கல்வியாளராகவும் இருந்தார்.
ரஞ்சித் குமார் இயக்கிய ஜிடி நாயுடு - தி எடிசன் ஆஃப் இந்தியா என்ற ஆவணப்படம் சமீபத்தில் 66வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திரைப்பட விருதை வென்றது. இதனிடையே மாதவன் நடிக்கும் ஜி.டி.என் படத்தில், ஜெயராம், பிரியாமணி மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர்.
நடிகராக இருந்து திரைப்பட தயாரிப்பாளராக மாறிய கிருஷ்ணகுமார் ராமகுமார் மாடர்ன் லவ்: சென்னை திரைப்படத்தின் ஒரு பகுதியை இயக்கியுள்ளார், இது அவரது முதல் திரைப்படமாகும். அரவிந்த் கமலநாதன் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.