ராதிகா மற்றும் சரத்குமாருக்கு இன்று திருமண நாள், இந்நிலையில் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை முகநூலில் ராதிகா பகிர்ந்துள்ளார்.
நடிகை ராதிகா சரத்குமார் தமிழ் சினிமாவில் முக்கிய குணச்சித்திர நகையாக உள்ளார். தனித்துவமான படங்களை அவர் தேர்வு செய்து ஆரம்ப காலத்தில் நடித்துள்ளார். இவர் திரைதுறையில் மட்டும் அல்ல சித்தி என்ற ரீரியலின் மூலம் சின்னத்திரை உலகத்தையே தனதாக்கியவர். 1999 டிசம்பர் 20ம் தேதி தொடங்க இந்த சீரியல் நம்பர் 1ம் தேதி 2001 ஆண்டு வரை தொடர்ந்து ஒளிபரப்பானது.
ஜீன்ஸ் படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் பெரும் பாராட்டை இவருக்கு வாங்கி கொடுத்தது. 1985ம் ஆண்டு, தயாரிப்பாளர் பிரிவில் தேசிய விருதை வென்றுள்ளார். பல முறை பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார். சமீபத்தில் கூட ‘love today’ படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த அம்மா கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது.
இவர் இயக்குநர் பிரதாப் போத்தனை 1985ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்கள் 1986ம் ஆணடு பிரிந்தனர். இதைத்தொடர்ந்து ரயன் ஹார்டி என்ற பிரிட்டிஷ் நபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகள் பிறந்தார். இவரது கணவர் தொடர்ந்து ராதிகாவை துன்புருத்தியாதால், அவரைவிட்டு ராதிகா பிரிந்தார்.
2001ம் ஆண்டு சரத்குமாரை இவர் திருமணம் செய்துகொண்டார். இவர் தனிப்பட்ட வாழ்வைபற்றி பல விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் அதை அவர் பெரிதாக பொருட்படுத்தாமல், சினிமா மற்றும் சீரியலில் தனது கவனத்தை காட்டினார். ராடான் என்ற மீடியா கம்பெனினியை உருவாக்கினார். இந்நிலையில் இன்று ராதிகா மற்றும் சரத்குமார் தங்களது திருமண நாளை கொண்டாடுகின்றனர். இது தொடர்பாக முகநூலில் இருவரின் புகைப்படத்தை ராதிகா பகிர்ந்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“