எப்போது திருமணம் செய்துகொள்ள போகிறீர்கள் என்று பிரபல நடிகை ராய் லட்சுமியிடம் ரசிகர்கள் கேட்டுள்ளனர்.
தமிழில் வெளியான கற்க கசடற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராய் லட்சுமி. இதை ஆர்.வி.உதயகுமார் இயக்கி இருந்தார்.பின், தர்மபுரி, முத்திரை, நான் அவன் இல்லை 2, காஞ்சனா, மங்காத்தா, அரண்மனை உட்பட பல படங்களில் நடித்தார்.
இப்போது தமிழில் சிண்ட்ரெல்லா என்ற படத்திலும் தெலுங்கில் ஆனந்த பைரவி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்தியில் பாய்சன் என்ற வெப்சீரிஸின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். இதை விஷால் பாண்டியா இயக்குகிறார். பூஜா சோப்ரா, கவுதம் குலாடி, தஹர் ஷபிர் நடிக்கின்றனர். இந்தி நடிகர் அப்தாப் ஷிவ்தசானி முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என கலக்கிய ராய் லட்சுமிக்கு இப்போது அதிக பட வாய்ப்புகள் இல்லை. லாக்டவுன் காரணமாக வீட்டில் இருக்கும் நடிகைகள் சமூக வலைத்தளங்களில் தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி பதிவிட்டு பரபரப்பை கிளப்பி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ராய்லட்சுமியும் அடிக்கடி ஹாட் போட்டோக்களை பதிவிடுவது வழக்கம். பிகினி போட்டோக்களை போட்டு ரசிகர்களை கிறங்கடிப்பதும் உண்டு. அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன் அவர் வெளியிட்டிருந்த கிளாமர் போட்டோ பரபரப்பாகி இருந்தது.
‘வயசாயிட்டே போகுதே.. எப்ப கல்யாணம் பண்ண போறீங்க? என்று ஒரு ரசிகர் கேட்டுள்ளார். இன்னொருவர் இந்த லாக்டவுன்ல எங்க இருக்கீங்க என்று கேட்டிருக்கிறார். உங்க ஸ்மைல் இருக்கே, அதுக்கு ஈடு இணை இல்லை என்று சிலர் தெரிவித்துள்ளனர். நீங்க பிகினியிலதான் மிரட்டறீங்க என்று சிலரும், நீங்க என்ன டிரெஸ் போட்டிருந்தாலும் பரவாயில்லை. எப்பவும் அழகுதான் என்று சிலர் கூறியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil