சொகுசு கப்பலில் உல்லாசம்... ராய் லட்சுமி பேக், கண்ணாடி விலை இத்தனை லட்சமா?

சொகுசு கப்பலில் ராய் லட்சுமி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த இத்தாலி பயணம் ராய் லட்சுமிக்கு ஒரு புத்துணர்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சொகுசு கப்பலில் ராய் லட்சுமி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த இத்தாலி பயணம் ராய் லட்சுமிக்கு ஒரு புத்துணர்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

author-image
WebDesk
New Update
raai laxsmi

பிரபல நடிகை ராய் லட்சுமி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட புதிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. சினிமா துறையில் பிசியாக இருக்கும் நடிகைகள் பெரும்பாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார்கள். அந்த வரிசையில் நடிகை ராய் லட்சுமியும் அடிக்கடி தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.

Advertisment

சமீபத்தில், ராய் லட்சுமி இத்தாலியில் தனி தீவு ஒன்றில் சொகுசு கப்பலில் பயணம் செய்தபோது எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அந்த புகைப்படங்களில், ராய் லட்சுமி அணிந்திருந்த அணிகலன்கள் மற்றும் உடைகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தின. அவர் வைத்திருந்த பிராண்டட் ஹேண்ட்பேக் மற்றும் குச்சி சன் கிளாஸ் ஆகியவை அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தன.

raai laksmi

ராய் லட்சுமி வைத்திருந்த ஹேண்ட்பேக், உலகப் புகழ்பெற்ற கோயார்ட் ஸ்ட்ரக்ச்சர்டு ரொயட் என்ற பிராண்ட் ஆகும். இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.3,18,000 ஆகும். மேலும், அவர் அணிந்திருந்த சன் கிளாஸ், குச்சி பிராண்ட் ஆகும். இதன் விலை சுமார் ரூ.22,000 ஆகும்.

நடிகை ராய் லட்சுமி, இயக்குநர் ஆர்.பி. உதயகுமாரன் இயக்கிய 'கற்க கசடற' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின்னர், அவர் பார்த்திபனுடன் 'குண்டக்க மண்டக்க', விஜயகாந்துடன் 'தர்மபுரி' போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். 'மங்காத்தா', 'காஞ்சனா', 'தாண்டவம்', 'அரண்மனை' போன்ற வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களிலும் ராய் லட்சுமி நடித்துள்ளார்.

Advertisment
Advertisements

தற்போது, ராய் லட்சுமி சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அவரது கவர்ச்சியான தோற்றமும், ஆடம்பரமான வாழ்க்கை முறையும் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. இந்த இத்தாலி பயணம் ராய் லட்சுமிக்கு ஒரு புத்துணர்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Entertainment News Tamil Raai Laxmi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: