Raangi Teaser: ஆக்ஷன் த்ரில்லராக த்ரிஷாவின் புதிய அவதாரத்தில் மாஸாக உருவாகியுள்ளது ‘ராங்கி’ திரைப்படம். வில்லன்களைத் துரத்துவதையும், சில கனமான அதிரடி காட்சிகளையும், எதிரிகளை ஓடவிடுவதையும் இப்படத்தில் காண முடிகிறது. இந்தப் படத்தின் டீஸர் இன்று வெளியிடப்பட்டது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், த்ரிஷா போலீசாரால் கைது செய்யப்படுவது போல உள்ளதால், படத்தில் இதற்கான பதில்கள் இருக்கும் என்றே தெரிகிறது.
’எங்கேயும் எப்போதும்’ படத்தின் இயக்குநர் எம்.சரவணன் இயக்கியுள்ள இப்படத்திற்கு சி.சத்யா இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தின் திரைக்கதையை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியுள்ளார். சக்தி ஒளிப்பதிவு செய்ய, சுபாரக் எடிட்டராக பணியாற்றியுள்ளார்.
Different Trish???? Cant wait for an another BB ????#RAANGI #RaangiTeaser https://t.co/aA3P8GMA18
— Elango (@KLassy_elegance) December 8, 2019
வித்தியாசமான த்ரிஷா, இன்னொரு பிளாக் பஸ்டருக்கு காத்திருக்க முடியவில்லை என இந்தப் பயனர் தெரிவித்துள்ளார்.
#RaangiTeaser Very very good and Very good acting My heart touching Love u so much @trishtrashers ma’am. And best wishes for your upcoming film and project
— Prasanta Roy (@PrasantaHitler) December 8, 2019
ஹார்ட் டச்சிங்காக உள்ளதென இவர் குறிப்பிட்டுள்ளார்.
16 years ga industry lo untu inka main lead roles cheyyadam chala kashtam, ????????
But, she is something ❤️????????
South queen @trishtrashers ❤️????#Raangiteaser ???????? pic.twitter.com/TgU22E0Emd
— Pawankalyan Fan (@YursSatish) December 8, 2019
16 வருஷம் தென்னிந்திய சினிமாவுல முன்னணி நடிகையா இருக்குறது எவ்ளோ கஷ்டம்.
96 படத்தில் கண்களில் காதலுடன் மென்மையாக கதாபாத்திரத்தில் நடித்திருந்த த்ரிஷாவை, முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளில் பார்க்க காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Raangi teaser trisha action thriller m saravanan