ஏ.ஐ.-ல் க்ளைமேக்ஸ் மாற்றம்; உயிருடன் வரும் குந்தன்: 'ராஞ்சனா' பட ரீ-ரிலீஸ்க்கு இயக்குனர் கடும் எதிர்ப்பு!

ஆனந்த் எல் ராயின் ரஞ்சனா திரைப்படம் ஏ.ஐ மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸுடன் ஆகஸ்ட் 1-ம் தேதி மீண்டும் வெளியாகிறது. இந்த முடிவுக்கு இயக்குநர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஆனந்த் எல் ராயின் ரஞ்சனா திரைப்படம் ஏ.ஐ மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸுடன் ஆகஸ்ட் 1-ம் தேதி மீண்டும் வெளியாகிறது. இந்த முடிவுக்கு இயக்குநர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Ranchana Movie

ஆனந்த் எல் ராய் இயக்கத்தில், தனுஷ், சோனம் கபூர் நடிப்பில் கடந்த 2013-ல் வெளியான படம் 'ரஞ்சனா' (Raanjhanaa). இந்தப் படம் வெளியானபோது, அதன் உணர்வுபூர்வமான கதைக்களமும், அதிர வைக்கும் கிளைமாக்ஸும் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, தனுஷ் ஏற்று நடித்த குந்தன் கதாபாத்திரத்தின் மரணம், பலரையும் கண் கலங்க வைத்தது. படம் ஒருபுறம் கொண்டாடப்பட்டாலும், அதன் சோகமான முடிவு குறித்து ஒரு சாரார் மத்தியில் விவாதங்கள் எழுந்து வந்தன.

Advertisment

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:

தற்போது சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆகஸ்ட் 1-ம் தேதி 'ரஞ்சனா' மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது என்ற செய்தி வெளியானதும், ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர். அதையும் தாண்டி, மார்க்கெட்டிங் போஸ்டர்கள் “செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் புதிய கிளைமாக்ஸ்” என்ற அறிவிப்புடன் வெளிவந்தபோது, அது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குந்தன் இறக்கும் அந்த சோகமான கிளைமாக்ஸ் மாற்றப்பட்டு, ஏ.ஐ.மூலம் உருவாக்கப்பட்ட ஒரு 'மகிழ்ச்சியான' கிளைமாக்ஸ்டன் படம் வெளியாகவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது,

இந்த முடிவுக்கு படத்தின் இயக்குநர் மற்றும் இணை தயாரிப்பாளர் ஆனந்த் எல் ராய் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனது 'கலர் யெல்லோ புரொடக்ஷன்ஸ்' பதாகையின் கீழ் இந்தப் படத்தை இணைந்து தயாரித்திருந்தாலும், ஏ,ஐ மூலம் கிளைமாக்ஸை மாற்றியதற்கு ஈரோஸ் இன்டர்நேஷனல் ஸ்டுடியோ தன்னை கலந்தாலோசிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisements

இது குறித்து இந்தியன் எக்ஸ்பிஸின் ஸ்கிரீனுக்கு அவர் அளித்த பேட்டியில், "சமூக வலைத்தள அறிவிப்புகள் மூலமாகத்தான் இது எனக்குத் தெரியவந்தது. ஏன் கிளைமாக்ஸை மாற்றுகிறார்கள் என்று மக்கள் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பத் தொடங்கிவிட்டனர். என்னால் இதை புரிந்துகொள்ளவே முடியவில்லை," என்று தெரிவித்துள்ளார். அவர் ஈரோஸ் இன்டர்நேஷனலைத் தொடர்பு கொண்டு தனது ஆட்சேபனையைத் தெரிவித்தபோது, அவர்கள் ஏற்றுக்கொள்ளாததால், தனது பெயரை "ஏ.ஐ மாற்றப்பட்ட படத்திலிருந்து" நீக்கக் கோரி அவர்களுக்கு கடிதம் எழுதப் போவதாகவும் கூறியுள்ளார்.

இது எப்படி சாத்தியமாகும் என்று எனக்கு புரியவில்லை. மக்கள் இந்த கிளைமாக்ஸை நேசித்தார்கள்! ஒரு இயக்குநராக இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் பார்வையாளர்களையாவது கேளுங்கள்," என்று ஆனந்த் எல் ராய் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஏ.ஐ.மூலம் உருவாக்கப்பட்ட கிளைமாக்ஸ், குந்தன் உயிர் பிழைக்கும் ஒரு மாற்று, 'மகிழ்ச்சியான' முடிவாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. "மகிழ்ச்சியான முடிவு என்றால் என்ன? அது ஒரு சோகம், அது ஒரு உணர்வு. உணர்ச்சிகளை எப்படி சிதைக்க முடியும்? படத்தின் ஆத்மா அந்த கிளைமாக்ஸில் தான் உள்ளது," என்று ராய் மேலும் அழுத்தமாகக் கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கை திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு ஒரு ஆபத்தான, நியாயமற்ற முன்னுதாரணத்தை உருவாக்குகிறது. இதிலிருந்து ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், நான் ஒரு பாடம் கற்றுக்கொண்டேன். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது நான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நான் இதை சமாளித்துக் கொண்டிருக்கிறேன், ஆனால் மற்ற திரைப்படத் தயாரிப்பாளர்கள் இதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு ஸ்டுடியோ கதை பற்றி கவலைப்படுவதில்லை. சில கோடிகளை சம்பாதிக்க, அவர்கள் ஒரு எழுத்தாளர், இயக்குநர் மற்றும் நடிகரின் படைப்பைத் தகர்த்து விடுகிறார்கள்," என்று எச்சரித்துள்ளார்.

ஈரோஸ் இன்டர்நேஷனல் புதிய பிரிண்ட்டை தமிழ்நாடு விநியோகஸ்தரான அப்ச்விங் என்டர்டெயின்மென்ட்டிற்கு விற்றுள்ளது. "ஒருவேளை அவர்கள் முதலில் தமிழ்நாட்டில் தான் இதை முயற்சிக்கிறார்கள். அவர்கள் அங்கு ஒரு விநியோகஸ்தருக்கு விற்று, ஏற்கனவே சில கோடிகள் சம்பாதித்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் ரோமில் ஒரு குற்றம் செய்தால், அது இன்னும் ஒரு குற்றம்தான்! நீங்கள் அதை தமிழ்நாட்டில் வெளியிட்டாலும், அங்கு எங்களுக்கு அவ்வளவு பிரச்னை இல்லை என்றாலும், என்னுடைய நடிகர் இருக்கிறார். என்னுடைய படத்தால் அவரது இமேஜுக்கு என்ன நடந்தாலும் நான் பொறுப்பு," என்றுஆனந்த் எல் ராய் கூறியுள்ளார்.

குறுகிய கால லாபத்திற்காக ஈரோஸ் இன்டர்நேஷனல் செய்த இந்த வணிக நகர்வின் நீண்ட கால தாக்கத்தை அவர்கள் உணரவில்லை "நடிகர்களும் பார்வையாளர்களும் அவர்களுக்கு எதிராகத் திரும்பும்போது அவர்கள் விரைவில் உணருவார்கள். எந்த நடிகர்களும் இனி அவர்களுடன் வேலை செய்ய விரும்ப மாட்டார்கள். ஒருவேளை அவர்கள் இனி நடிகர்களுடன் வேலை செய்ய விரும்பாமல், ஏ.ஐ  உடன் மட்டுமே படங்களை உருவாக்க திட்டமிட்டிருக்கலாம். தொழில்நுட்பத்திற்கு நான் எதிரானவன் இல்லை, அதன் தவறான பயன்பாட்டிற்கே எதிர்ப்பு என்றும் ஆனந்த் எல் ராய் தெளிவுபடுத்தியுள்ளார்.

தனது அடுத்த படமான தனுஷ் மற்றும் கீர்த்தி சனோன் நடிக்கும் 'தேரே இஷ்க் மெயின்' படத்திற்கு சிறந்த வி.எஃப்எக்ஸ்  உருவாக்க அவர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார். ஆனால், ஸ்டுடியோக்களுக்கு சட்டபூர்வமான, நிதி மற்றும் தொழில்நுட்ப வலிமை இருப்பதால், தனது கலையை தவறாகப் பயன்படுத்துவதை அவர் பாராட்டவில்லை. ஏ.ஐ. தான் எதிர்காலம் என்று சொல்கிறார்கள். எல்லோருக்கும் அது தெரியும். ஆனால் அதை எதிர்காலத்திற்கோ அல்லது நிகழ்காலத்திற்கோ பயன்படுத்துங்கள். கடந்த காலத்தை சிதைக்க பயன்படுத்தாதீர்கள்.

நீங்கள் ஒரு கலைஞரின் ஓவியத்தை வாங்கினால், நீங்கள் விரும்பினால் அதற்கு மீசை சேர்க்கலாம். ஆனால் அதை வணிக ரீதியாக மறுவிற்க முடியாது. அடுத்ததாக, 'ஷோலே' (1975) படத்தின் கிளைமாக்ஸை மாற்றி ஜெய் (அமிதாப் பச்சன்) மற்றும் வீரு (தர்மேந்திரா) இருவரையும் உயிரோடு வைத்திருக்கக்கூடும்," என்று ராய் தனது ஆழ்ந்த கவலையையும் கோபத்தையும் வெளிப்படுத்தினார்.

tamil cinema actress

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: