/tamil-ie/media/media_files/uploads/2023/05/raasaa.jpg)
’ராசா கண்ணு' பாடல்
மாரி செல்வராஜ் இயக்கத்தில், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் திரைப்படத்தில் வடிவேலு பாடிய பாடல் நேற்று வெளியானது.
’ராசா கண்ணு’ என்ற பாடல் நேற்று வெளியானது முதல், சமூகவலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. பல வருடங்கள் கழித்து வடிவேலு மீண்டும் பாடியுள்ளார். இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முதல் முறை கேட்கும்போதே மனதை உருகவைப்பதாக இருக்கிறது என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
ரொம்ப நாளைக்கு அப்புறம் தலைவன் வாய்ஸ்ல ❤️🔥#RaasaKannu#MAAMANNANpic.twitter.com/6wvzS2Mg7S
— ❤️🔥°°ட்விட்🐦காதலன்°°❤️🔥 (@Elanthaari_Paya) May 19, 2023
இந்த பாடலின் காட்சியமைப்பும், ஏ.ஆர்.ரஹமான் இசையும், ஒரு வித வலியை நமக்கு கடத்துகிறது என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ’வடிவேலுவின் குரலில், அப்படி ஒரு ஆத்மார்த்தமான உயிரோட்டம் இருப்பதாகவும்’ ரசிகர்கள் கூறியுள்ளனர்.
First time kekkum pothe melted @arrahman sir 😭❤🔥#RaasaKannuhttps://t.co/o9IZra6sff
— ARR - For Life (@rahmanic_) May 19, 2023
வடிவேலுவின் குரல் ஒரு வித வலியை கடத்துவதாகவும், அந்த பாடலுக்கு அது உயிர் கொடுத்துள்ளது என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பாடலை எழுதிய யுகபாரதியின் வரிகளும், ரசிக்கும் விதத்தில் அமைந்திருப்பதாகவும் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.
Painful Lyrics and Soul- Melting Music #RaasaKannu song masterpiece sir @arrahman ❤🔥 #MAAMANNANpic.twitter.com/XWdstksKaP
— Troni (@Arrvibes) May 19, 2023
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.