Jyothika's Raatchasi Movie Leaked in Tamilrockers: ஜோதிகாவின் ’ராட்சசி’யை ‘லீக்’ செய்த தமிழ் ராக்கர்ஸ்

Tamilrockers Leaks Raatchasi Full Movie Online: பள்ளிக் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெற்றோர்களுக்குமான திரைப்படம், என ராட்சசியை பலரும் பாராட்டினார்கள்.

Tamilrockers Leaks Raatchasi Full Movie Online: பள்ளிக் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெற்றோர்களுக்குமான திரைப்படம், என ராட்சசியை பலரும் பாராட்டினார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
jyothika raatchasi, tamil rockers

‘பொன்மகள் வந்தாள்’ பிரச்னை!

Tamilrockers Leaks Raatchasi Full Movie Online: நடிகை ஜோதிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘ராட்சசி’ திரைப்படம் நேற்று வெளியானது.

Advertisment

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இதனை இயக்குநர் கெளதம்ராஜ் இயக்கியிருக்கிறார். இந்தப் படம் பள்ளிக் கல்வியை மையமாக வைத்து உருவாகியுள்ளது. ஹரீஷ் பெரேடி, பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், அருள்தாஸ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசை ஷான் ரோல்டன்.

அரசு பள்ளிக்கு புதிதாக வரும் தலைமையாசிரியை கீதா ராணி (ஜோ), அந்தப் பள்ளியை எவ்வாறு மாற்றுகிறார் என்பது தான் கதை. திருமணத்துக்குப் பிறகு தன்னை முதன்மைப் படுத்தும் கதைகளில் நடித்துவரும் ஜோதிகாவுக்கு, ’ராட்சசி’ திரைப்படம் முக்கியமான ஒன்று என்கிறார்கள் ரசிகர்கள்.

அதோடு பள்ளிக் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெற்றோர்களுக்குமான திரைப்படம், என ராட்சசியை பலரும் பாராட்டினார்கள். இந்நிலையில் இந்தப் படத்தை தமிழ் ராக்கர்ஸ், தனது இணைய தளத்தில் ’லீக்’ செய்துள்ளது. இதனால் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள் படக்குழுவினர்.

Tamil Rockers Jyothika

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: