Advertisment

Raayan movie review: இயக்குனராக மீண்டும் ஜெயித்தாரா தனுஷ்? ராயன் பட விமர்சனம்

ராயன் குடும்பத்தின் பாதுகாவலராக செல்வராகவன் கச்சிதமாக இருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா கிடைத்த வாய்ப்பில் தனது நடிப்பின் மூலம் முத்திரை பதிக்க முயன்றிருந்தாலும், அவருக்கான கதாபாத்திரம் வலுவாக அமைக்கப்படவில்லை.

author-image
WebDesk
New Update
Raayan review

Raayan review

ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தனுஷ் எழுதி, இயக்கி, நடித்துள்ள ராயன் திரைப்படம் இன்று (ஜூலை 26) திரையரங்குகளில் வெளியானது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், தனுஷ் நடிப்பில் வெளியாகும் 50வது படம் இது.

Advertisment

Raayan Movie Review

காத்தவராயன் ( தனுஷ்) முத்துவேல் ராயன் ( சந்தீப் கிஷன்) மாணிக்கவேல் ராயன் (காளிதாஸ் ஜெயராம்) மூவரும் சகோதரர்கள். இவர்களின் ஒரே தங்கை துர்கா (துஷாரா விஜயன்).

சிறுவயதில் சொந்த ஊரில் பெற்றோரைத் தொலைத்த ராயன் தனது இரண்டு தம்பிகள் மற்றும் கைக் குழந்தையாக இருக்கும் தங்கையுடன் பிழைப்பிற்காக சென்னைக்கு வருகிறார். அங்கு சேகர் (செல்வராகவன்), ராயனுக்கு வேலை கொடுத்து உதவுகிறார்.

ராயன் தன் தங்கை, தம்பிகளுக்காக கஷ்டப்பட்டு உழைக்கிறார்.

மறுபக்கம் சென்னையின் பிரபல ரவுடியின் மகன் சேது (எஸ்.ஜே சூர்யா) தனது தந்தையைக் கொன்ற துரையை (சரவணன்) எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று காத்திருக்கிறார்…. இவர்களுக்கு இடையில் எப்படியாவது மோதலை ஏற்படுத்தி அவர்களை மொத்தமாக அழிக்க நினைக்கிறார் போலீஸாக வரும் பிரகாஷ் ராஜ்.

இதில் ராயனின் குடும்பம் எப்படி சிக்குகிறது, தன் குடும்பத்தை ராயன் காப்பாற்றினாரா இல்லையா என்பதே இந்த படத்தின் கதை… 

தம்பிகளாக சந்தீப் மற்றும் காளிதாஸ் தங்கையாக துஷாரா விஜயன் கச்சிதமாகப் பொருந்துகின்றனர். இவர்களுக்கு அண்ணனாக ராயனாக தனுஷ் மனதில் நிற்கிறார்...

முதல் பாகத்தில் கதை தொடங்கி வைப்பது சந்தீப் கிஷன்  என்றால். இரண்டாம் பாகத்தில் துஷாரா விஜயன் தனுஷைக் காட்டிலும் ஒரு படி மேலே செல்கிறார்..

ராயன் குடும்பத்தின் பாதுகாவலராக செல்வராகவன் கச்சிதமாக இருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா கிடைத்த வாய்ப்பில் தனது நடிப்பின் மூலம் முத்திரை பதிக்க முயன்றிருந்தாலும், அவருக்கான கதாபாத்திரம் வலுவாக அமைக்கப்படவில்லை.

 

போலீசாக வரும் பிரகாஷ்ராஜ் முக்கியமான கதாப்பாத்திரம் என்றாலும் அனைவரையும்விட குறைவான நேரமே திரையில் தோன்றுகிறார். அபர்னா பாலமுரளி அந்த இடத்திலேயே பிறந்து வளர்ந்ததுபோல் தோற்றத்திலும், நடிப்பிலும் பொருந்தியிருக்கிறார்.

படத்தை இயக்கிய விதத்திற்காக தனுஷை பாராட்டியே ஆக வேண்டும். அவருக்கு பக்கபலமாக இருந்திருக்கிறது தொழில்நுட்ப குழு என்பது பெரிய திரையில் தெரிகிறது.. இது வழக்கமான பழிவாங்கும் படமாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பை இரண்டாம் பாதியில் உள்ள டுவிஸ்ட் மாற்றுகிறது. ஆனால் அது துரதிருஷ்டமாக வேலை செய்யவில்லை..

ஏ.ஆர். ரஹ்மான் இசை படத்திற்கு பெரிய ஆறுதல். அடிதடி சண்டைக் காட்சிகள், குடும்பத்தில் நிகழும் உருக்கமான காட்சிகள் எனப் பல தருணங்களில் தனது பின்னணி இசை மூலம் படத்திற்கு வலுசேர்த்து இருக்கிறார் ரஹ்மான்.. க்ளைமேக்ஸில் வரும் அடங்காத அசுரன் பாடல் அல்டிமேட்…

இப்படி ஒரு ஏ.ஆர்.ரஹ்மானுக்காகவே இத்தனை நாளாகக் காத்திருந்தோம்..

எடிட்டர் ஜி.கே.பிரசன்னாவும், ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷும் படத்தை உயிர்ப்பூட்டுகிறார்கள்..

கதை நடக்கும் இடத்தையும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகாகக் காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ். சண்டைக் காட்சிகள், காதல் காட்சிகள் என அனைத்திலும் உணர்ச்சிகளைக் கடத்துவதில் அவரின் பங்கும் பெரிது.

பிரபுதேவா மற்றும் பாபா பாஸ்கர் ஆகியோரின் கோரியோகிராஃபி உணர்ச்சிகளுக்கு ஈடுகொடுக்கவில்லை. ஸ்டண்ட் கோரியோகிராஃபிக்காக பீட்டர் ஹெய்ன் தனித்து தெரிகிறார்.

ப.பாண்டி படத்தில் மனதை வருடும் கதை கொண்டு இயக்குநராக வெற்றி பெற்ற தனுஷ், முழு நீள ஆக்‌ஷன் படத்தில் இயக்குநராக தனது பங்கை சிறப்பாகச் செய்துள்ளார்.. ஒளிப்பதிவு, நடிகர்கள் தேர்வு என பல துறைகளையும் தனுஷ் சிறப்பாக ஒன்றிணைத்து இருக்கிறார்.. இவை அனைத்தும் ஒன்றாக வந்தாலும், ராயன் எதிர்பார்த்த அளவு என்பது ஏமாற்றம்தான்.

Read in English: Raayan movie review: Dhanush crafts an almost compelling film that needed a lot more heft

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Dhanush
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment