Advertisment

நியூ என்டரி பிரகாஷ் ராஜ், வரலட்சுமி சரத்குமார் : தனுஷின் ராயன் படத்தின் புதிய அப்டேட்

தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படத்தில் ஏற்கனவே எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Dhanush Rayan Movie

தனுஷின் ராயன் படத்தின் நடிகர்கள் அறிமுகம்.

தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த படத்தில் நடித்துள்ள நடிகர் நடிகைகள் குறித்து அறிவிப்புகள் நாள்தோறும் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த படத்தில் அபர்னா பாலமுரளி, மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தாயரிப்பாளர், பாடகர் என பன்முக திறமை கொண்டவர் தனுஷ். நடிப்பில் முன்னணி நடிகராக முத்திரை பதித்துள்ள இவர், பா.பாண்டி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் அவருக்கு வெற்றியை கொடுத்த நிலையில், தற்போது தனது 50-வது படத்தை இயக்கி நடித்துள்ளார். சன் பிச்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

டி50 என்று அழைக்கப்பட்ட இந்த படத்தின் டைட்டில் ராயன் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் தனுஷின் சகோதரரும், இயக்குனருமான செல்வராகவன் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது பிரகாஷ் ராஜ், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

திருவிளையாடல் ஆரம்பம், திருச்சிற்றம்பலம் போன்ற வெற்றிப் படங்களில் பிரகாஷ்ராஜுடன் இணைந்து பணியாற்றிய தனுஷ், ராயன் மீண்டும் இணைந்துள்ளார். ராயன் படத்தில் பிரகாஷ்ராஜ் இணைந்துள்ளதை ஒரு புகைப்படத்துடன் அறிவித்துள்ள தனுஷ்,, “என்ன மகிழ்ச்சி பிரகாஷ் ராஜ் சார்என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் கறுப்பு வெள்ளை போஸ்டரில் பிரகாஷ் ராஜ் நாற்காலியில் அமர்ந்து சிகரெட் பிடிப்பது போல் உள்ளது.

மேலும் ஒரு குறுகிய சந்தில் இருக்கிறார், அவருக்குப் பின்னால் ஒரு உயரமான கட்டிடம் உள்ளது. அதேபோல் அபர்ணா பாலமுரளியின் போஸ்டரைப் பகிர்ந்த தனுஷ், அவரை சூப்பர் டேலண்ட்என்று குறிப்பிட்டுள்ளார். வரலக்ஷ்மி சரத்குமாரும் இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் இந்த வாய்ப்பை வழங்கியதற்காக தனுஷுக்கு அவர் ஒரு ட்வீட்டில் நன்றி தெரிவித்தார்,

இப்படத்தில் பருத்திவீரன் புகழ் நடிகர் சரவணனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். காளிதாஸ் ஜெயராம் மற்றும் சந்தீப் கிஷன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் சந்தீப் இருந்தது குறிப்பிடத்தக்கது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். ராயன் தவிர, தனுஷ் தற்போது தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலாவுடன் ஒரு படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அதேபோல் தனது இயக்கயத்தில், அனிகா சுரேந்தர், தாமஸ் மேத்யூ மற்றும் பிரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் தனுஷ் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dhanush
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment