விஜய் டிவி சீரியலில் இருந்து இப்போது விலகவில்லை என குழப்பமாக பதில் அளித்திருக்கிறார் நடிகை ரச்சிதா.
விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் ரச்சிதா மஹாலக்ஷ்மி. இவர் விஜய் டிவியின் பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர். பின்னர் சரவணன் மீனாட்சி சீரியலின் இரண்டு சீசன்களில் நடித்தார். அதன்பின் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நாச்சியார்புரம் சீரியலில் நடித்தார். தற்போது விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் இரண்டாவது சீசனில் நடித்து வருகிறார். இதில் ஹீரோ செந்திலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
ரச்சிதா உப்புக்கருவாடு உள்ளிட்ட ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ஒரு கன்னடப் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் முத்துராசு கொலை தொடர்பாக கதை விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த சில எபிஷோடுகளில் ரச்சிதாவை காண முடியாததால், அவர் சீரியலில் இருந்து விலகிவிட்டாரா? என ரசிகர் சந்தேகமடைந்தனர். அந்த நேரத்தில் கன்னட படத்தில் ஒப்பந்தமாகி, அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இதனால் திரைப்படத்தில் நடிப்பதால் ரச்சிதா சீரியலை விட்டு விலகிவிட்டதாக பேச்சுகள் வெளி வந்தன.
இந்தநிலையில் ரச்சிதா, நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலை விட்டு விலகவில்லை என்பதைக் கூறும் வகையில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அதே தூண்… அதே மாடி… அதே கதவு… அதே வீடு… ஆஹா மறுபடியுமா, எங்கேயும் போகல, இங்கேயே தான் இருக்கு என பதிவிட்டவர், நாம் இருவர் நமக்கு இருவர் சீரியில் நான் விலகிவிட்டதாக சில வதந்திகள் வெளி வந்துள்ளன, ஆனால் நான் விலகவில்லை, போற வரைக்கும் போவோம்… தானா நின்னா பாத்துக்கலாம், அதுவரைக்கும் என்னை கொஞ்சம் ஃப்ரீயா விடுங்க, இத பெரிய செய்தியாக்காதீங்க, ஒரு பலனும் இல்ல, போறாங்க, போறாங்கனு சொல்லி நீங்களே போக வச்சிடுவிங்க போல, என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நமக்கு அடி ஒண்ணும் புதுசு இல்ல, பார்ப்போம் என்ன தான் நடக்கும்னு, போற வரைக்கும் போவோம், சப்போர்ட் பண்ண நீங்கதான் இருக்கீங்களே, என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம், என்றும் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil