சீரியல் டு சினிமா: ஷூட்டிங் போட்டோ வெளியிட்டு உறுதிப்படுத்திய விஜய் டிவி நடிகை
Actress Rachitha Mahalakshmi debut Kannada movie 'Ranganayaka shooting spot photo goes viral Tamil News: சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி, தான் நடிக்கும் கன்னட படத்தின் ஷூட்டிங் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில், தற்போது அவை ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்படும், இணைய பக்கங்களில் வைரலாகியும் வருகின்றன.
Actress Rachitha Mahalakshmi latest Tamil News: விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று ‘நாம் இருவர் நமக்கு இருவர்' சீசன் 2. இந்த சீரியலில் முன்னணி நாயகியாக நடிகை ‘ரச்சிதா மகாலட்சுமி’ நடித்து வருகிறார். இவர் கடந்த 2011ம் ஆண்டு ஒளிபரப்பாகிய ‘பிரிவோம் சந்திப்போம்’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகிவர். தொடர்ந்து இவர் நடித்த ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றார்.
Advertisment
இப்படி தமிழ் சீரியல்களில் கலக்கி வரும் நடிகை ரச்சிதாவுக்கு வெள்ளித்திரையில் தோன்றும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், அவர் ஒரு கன்னட படத்தில் நடிக்க உள்ளார் என்றும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அந்த செய்திகள் அனைத்தும் உண்மைதான் என கூறும் அளவிற்கு தற்போது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் ரச்சிதா.
ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டும், இணைய பக்கங்களில் வைரலாகியும் வரும் அந்த புகைப்படத்தில், தான் 'ரங்கநாயக' என்ற கன்னட படத்தில் நடிக்க உள்ளதாகவும், ரசிகர்கள் தன்னை ஆசீர்வாதிக்க வேண்டும் எனவும் ரச்சிதா குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த பட ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட மேலும் சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார் ரச்சிதா.
நடிகை ரச்சிதா, இதற்கு முன்னர் சில படங்களில் நடித்திருந்தாலும், அவர் ஹீரோயினாக நடிப்பது இதுவே முதல் முறை ஆகும். இவர் ஹீரோயினாக நடிக்கும் இந்த 'ரங்கநாயக' படத்தை இயக்குநர் குருபிரசாத் இயக்குகிறார். பிரபல கன்னட நடிகர் ஜகேஷ் ஹீரோவாக நடிக்கிறார்.