Rachitha Mahalakshmi Tamil News: சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. கடந்த 2011ம் ஆண்டு ஒளிபரப்பாகிய ‘பிரிவோம் சந்திப்போம்’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகிய இவர், இந்த சீரியலில் தனது ஜோடியாக நடித்த தினேஷ் உடன் நிஜத்திலும் ஜோடி ஆனார். தொடர்ந்து இவர் ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றார். மேலும், தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்.
இதற்கு காரணம் ரச்சிதா இந்த சீரியலில் ஹோம்லி லுக்கில் தோன்றி அவரின் உண்மையான பெயரை ரசிகர்கள் மறந்து போகும் அளவிற்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். குறிப்பாக அவரின் நேர்த்தியான ஆடை மற்றும் சிகை அலங்காரம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானது.சரவணன் மீனாட்சி சீரியலின் முதல் பாகம் வெற்றியைத் தொடர்ந்து அவர் 2வது பாகத்தில் மீனாட்சியாக என்ட்ரி ஆனார்.

வழக்கம் போல் சீரியல் ரசிகர்களும் தங்களின் ஏகோபித்த வரவேற்பை கொடுத்தனர். தொடர்ந்து சின்னத்திரையில் பல சீரியல்களில் ரச்சிதா நடித்தார். அவர் கடைசியாக நடித்து வந்த “நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2” சீரியலில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார். இது அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாகவும், பெரும் இடியாகவும் விழுந்தது. மேலும் அவர் கன்னட படத்தில் பெரிய நடிகருடன் நடிக்க உள்ளார் என்றும் செய்திகள் வெளியாகி, சில புகைப்படங்களும் வைரலாகின.
இதற்கிடையில், ரச்சிதா “நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் அவரின் கதாபாத்திரத்தின் பெயர் “மஹா” என்பதை தனது பதிவில் குறிப்பிட்டு “பை மஹா” என அதிகாரபூர்வமாக சீரியலில் இருந்து விலகுவதாக தெரிவித்து இருந்தார். இந்த பதிவு இன்ஸ்டா பக்கத்தில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகியது.

இந்நிலையில் ரசித்தா தற்போது கலர்ஸ் தமிழ் சீரியலில் ஒளிபரப்பாகி வரும் “இது சொல்ல மறந்த கதை” எனும் சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் கணவனை இழந்து இரு பிள்ளைகளை தனி ஆளாக இருந்து வளர்க்கும் பெண்ணாக அவர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ரசித்தா கலர்ஸ் தமிழ் சீரியலில் நடித்து வரும் “இது சொல்ல மறந்த கதை” சீரியல் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில், இந்த சீரியலில் வரும் கதாபாத்திரமும் தனது வாழ்க்கையும் சிறிது ஒத்துப்போவதாகவும், தற்போது தான் தனிமையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த கதாபாத்திரத்தில் இருக்கும் தைரியமும், அந்தந்த சூழ்நிலைகளை சமாளிக்கும் முதிர்ச்சியும் தனக்கு இருப்பதாகவும் ரசித்தா குறிப்பிட்டுள்ளார்.

நடிகை ரசித்தாவிற்கும் பிரபல சீரியல் நடிகர் தினேஷ் என்பவருக்கும் கடந்த 2015ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதி இடையே ஏற்பட்ட சில பிரச்சனையின் காரணமாக, இருவரும் தற்போது தனித்தனி வீட்டில் வாழ்த்து வருகின்றனர். முன்னதாக இந்த விவகாரம் சர்ச்சை ஆனாது என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“