நயன்தாரா சர்ச்சை: ஏன் இப்படி பேசினார் ராதாரவி?

என்னுடைய காலத்தில் கே.ஆர்.விஜயா தான் சீதாவாக நடிப்பார். இப்போது கும்பிடுகிறவர், கூப்பிடுகிறவர் என யார் வேண்டுமானாலும் சீதாவாக நடிக்கலாம்.

’கொலையுதிர் காலம்’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. படத்தின் இயக்குநர் சக்ரி டோலேட்டி மற்றும் கதாநாயகி நயன்தாரா ஆகிய இருவருமே இதில் கலந்துக் கொள்ளவில்லை.

படத்தில் வேலை செய்த தொழில்நுட்ப கலைஞர்களும், திரையுலகினரும் இதில் கலந்துக் கொண்டனர்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் ராதா ரவி கலந்துக் கொண்டார். அப்போது பேசிய அவர், “சகோதரி நயன்தாரா அவர்கள் நல்ல நடிகை. இந்தத்துறையில இவ்வளவு நாள் தம் கட்டுறதே பெரிய விஷயம். அவங்கள பத்தி வராத செய்திகளே இல்லை. அவ்வளவையும் தாங்கிக் கிட்டு நிக்கிறாங்க. தமிழ்நாட்டு மக்கள் எந்த செய்தியையும் 4 நாள் கழிச்சு விட்டுடுவாங்க. நயன்தாரா தமிழ்ல பேயாக நடிக்கிறார். தெலுங்குல சீதாவா நடிக்கிறாங்க. என்னுடைய காலத்தில் கே.ஆர்.விஜயா தான் சீதாவாக நடிப்பார். இப்போது கும்பிடுகிறவர், கூப்பிடுகிறவர் என யார் வேண்டுமானாலும் சீதாவாக நடிக்கலாம். இன்னிக்கு நிலைமை அப்படி ஆகிடுச்சி” என சர்ச்சையாகப் பேசினார்.


அதற்கு அரங்கத்தில் இருப்பவர்கள் கை தட்டியதால், ராதாரவிக்கு தன் தவறை உணர முடியவில்லை. அதன் பின் சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக கண்டனங்கள் பெருகத் தொடங்கின. இதைத் தொடர்ந்து நயனுக்கு ஆதரவாக பலரும் களம் இறங்கியுள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close