இதயக்கனி படத்தில் ஹீரோயினான ராதா சலுஜா; மும்பையில் அப்படி நடித்தவர் எம்.ஜி.ஆர் ஜோடி ஆனது எப்படி?
தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக ஓடிய இதயக்கனி படத்தில் எம்.ஜி.ஆர் ஜோடியாக ஹிந்தி நடிகை ராதா சலுஜா நடித்தார். அவர் எப்படி இந்தப் படத்தில் கமிட் என்ற சுவாரஸ்ய தகவலை இப்போது பார்ப்போம்.
Advertisment
இதுதொடர்பாக இதயக்கனி டிவி யூடியூப் சேனலில் மூத்த பத்திரிக்கையாளர் விஜயன் வெளியிட்டுள்ள வீடியோவில், சத்யா பிலிம்ஸின் 5 ஆவது படம் இதயக்கனி. அறிஞர் அண்ணா தன்னை வர்ணித்த பெயரையே படத்தின் பெயராக வைத்தார் எம்.ஜி.ஆர். தி.மு.க.,விலிருந்து எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டு பின்னர், அ.தி.மு.க.,வை தொடங்கி, கட்சி நல்ல நிலையில் வளர்ந்து கொண்டிருந்த நிலையில் வந்தப் படம் இதயக்கனி. லைட்டிங் செக் செய்வதற்கு பொதுவாக ஹீரோக்கள் நிற்கமாட்டார்கள், ஒளிப்பதிவாளர்களின் உதவியாளர்கள் தான் நிற்பார்கள். ஆனால், எம்.ஜி.ஆர் ஈகோ பார்க்காமல் அதை செய்தார்.
இந்தப் படத்தில் ஹீரோயினாக மும்பையில் இருந்து வந்த ராதா சலுஜா நடித்தார். ராதா சலுஜா நடித்ததன் மூலம் எம்.ஜி.ஆர் பெரிய ரிஸ்க் எடுத்தார். ஏனெனில் டோ ராகா என்ற ஹிந்தி படத்தில், பாலியல் வன்முறை காட்சியில் ராதா சலுஜா மிக கவர்ச்சியாக நடித்திருந்தார். அந்தக் காட்சிக்காக டோ ராகா படம் பெரிய அளவில் பெயர் பெற்றுவிட்டது. எனவே கவர்ச்சியாக நடித்தவர் எம்.ஜி.ஆருடன் ஹீரோயினாக நடிக்க சரியானவராக இருப்பாரா என்ற கேள்விகள் எழுந்த நிலையில், ராதா சலுஜா இதயக்கனி படத்தில் படித்தார். எம்.ஜி.ஆர் மற்றும் தயாரிப்பாளர்கள் துணிந்து அந்த முடிவை எடுத்தனர்.
Advertisment
Advertisements
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“