ஒழுங்கா நடினு அம்பிகாவை திட்டினாரு, நீ சொல்றதை கேட்டுக்கோடா: இயக்குனர் பற்றி ராதாரவியை எச்சரித்த கேப்டன்!

வில்லன் கதாபாத்திரங்களில் இருந்து படிப்படியாக குணச்சித்திர கதாபாத்திரங்களுக்கு மாறிய ராதாரவி தனது சினிமா பயணத்தின்போது நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

வில்லன் கதாபாத்திரங்களில் இருந்து படிப்படியாக குணச்சித்திர கதாபாத்திரங்களுக்கு மாறிய ராதாரவி தனது சினிமா பயணத்தின்போது நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Radharavi and Vijayakanth

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான குணச்சித்திரக் கலைஞர்களில் ஒருவர் ராதாரவி. 'நடிகவேள்' எம்.ஆர். ராதாவின் மகன் என்ற அடையாளத்துடன் திரையுலகில் அடியெடுத்து வைத்த இவர், தனது தனித்துவமான குரல், வில்லத்தனம் மற்றும் இயல்பான நகைச்சுவை உணர்வால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். வாவ் தமிழாவுக்கு அளித்த பேட்டி ஒன்றில் சில அனுபவங்கள் குறித்து பகிர்ந்துக்கொண்டார். 1976-ஆம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கிய 'மன்மத லீலை' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.

Advertisment

பின்னர், 'உயிருள்ளவரை உஷா' போன்ற படங்களில் வில்லனாக நடித்து தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டார். அவரது கனத்த குரலும், அழுத்தமான வசன உச்சரிப்பும் வில்லன் கதாபாத்திரங்களுக்கு வலு சேர்த்தன. வில்லன் கதாபாத்திரங்களில் இருந்து படிப்படியாக குணச்சித்திர கதாபாத்திரங்களுக்கு மாறினார். ஹீரோவுக்குப் பக்கபலமாக நிற்கும் பாசக்கார தந்தை, கிராமத் தலைவர், துரோகம் செய்யும் உறவினர் எனப் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் தனக்கு கேப்டன் விஜயகாந்த் இவருக்கு கூறிய அறிவுரை ஒன்றை பற்றி பகிர்ந்துள்ளார். சுந்தர்ராஜன் இயக்கத்தில் தனது முதல் படமான வைதேகி காத்திருந்தாள் படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். கேப்டன் விஜயகாந்த், இயக்குனரின் குணாதிசயம் குறித்து தனக்கு எச்சரிக்கை விடுத்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தையும் அவர் நினைவு கூர்ந்தார்.

vaidehi kathirunthal

Advertisment
Advertisements

விஜயகாந்த் அப்போது ராதாரவியிடம் நான் பாடும் பாடல் படத்தில் அம்பிகாவையே ஒழுங்கா நடிமா என்று இயக்குநர் சுந்தர்ராஜன் திட்டினார். "அவர் (சுந்தர்ராஜன்) சொல்றதை கேட்டுக்கோடா. நீ வேற முன்கோபக்காரன் அதனால் கோபப்படாமல் நடி" என விஜயகாந்த் அறிவுரை கூறியதாகத் தெரிவித்தார். அதனால் ராதாரவி அமைதியாக அவர் சொல்லும்படி நடித்ததாக தெரிவித்தார். 

அதேபோல வைதேகி காத்திருந்தாள் படப்பிடிப்பின்போது நடந்த மற்றொரு சம்பவத்தையும் ராதாரவி நினைவுகூர்ந்தார். புல்வெளியில் படுத்திருந்தபோது ஒரு காட்சிக்காக தன்னை, நள்ளிரவு 2 மணிக்கு எழுப்பி படப்பிடிப்பை தொடங்கியதாகவும், அதை மறக்க முடியாத அனுபவமாக கருதுவதாகவும் அவர் கூறினார். மேலும் அப்போது தூக்க கலக்கத்தில் மூகம் வீகியபடிதான் தான் நடித்ததாகவும் கூறினார். சுந்தர்ராஜன் இயக்கத்தில் அவர் நடித்த 'அம்மன் கோவில் கிழக்காலே' மற்றும் 'வைதேகி காத்திருந்தாள்' ஆகிய இரண்டு படங்களின் அனுபவங்களையும் ஒருபோதும் மறக்க மாட்டேன் என்று கூறினார். 

Radharavi Vijayakanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: