நடிகை ராதிகாவுடன் விஜய் சிறுவனாக இருக்கும் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைராகி வருகிறது.
எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளியானது ’இது எங்கள் நீதி’ திரைப்படத்தில் ராம்கி, ராதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த படத்தில் நடிகர் விஜய்யும் நடித்திருப்பார். இந்த படத்தில் அவர் ராதிகாவுடன் இருக்கும் புகைப்படம் வைராகி வருகிறது . இத்திரைப்படம் 1988ம் ஆண்டு வெளியானது.
இந்நிலையில் ’இது எங்கள் நீதி’ திரைப்படத்தைத் தொடர்ந்து ராதிகாவும், விஜய்யும் மீண்டும் தெறி திரைப்படத்தில் நடித்தனர். தெறி படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்திருப்பார் ராதிகா.
தற்போது விஜய் நடித்த லியோ திரைப்படம் வசூலில் பெரும் சாதனையை படைத்துள்ளது. அதிகம் வசூல் செய்த தமிழ் படங்களின் வரிசையில் லியோ 3ம் இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் விஜய் இப்படி ஒரு பெரும் நடிகராக வளருவார் என்று நான் அப்போது எதிர்பார்க்கவில்லை என்று ராதிகா கூறியுள்ளார்.
பெரும் நடிகராக மாறினாலும், சிறு வயதில் இருந்ததுபோல்தான் பணிவுடன் அன்பாக இருப்பதாகவும் நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“