’அந்த’ மாதிரியான கதைகள் நிறைய வந்தது… மனம் திறந்த ராதிகா ஆப்தே

'முற்போக்கான' எழுத்து என்ற பெயரில் எதையும் ஈஸியாக எழுதி விடுகிறார்கள்.

By: Updated: December 4, 2019, 09:22:55 PM

Radhika Apte : சிறந்த திரைப்படங்களை தேர்ந்தெடுப்பதற்காகவும், கொடுக்கப்படும் கதாபாத்திரங்களில் சிறப்பாக நடிப்பதற்காகவும் பாராட்டப்படுபவர் நடிகை ராதிகா ஆப்தே. போல்டான கதாபாத்திரங்கள் என்று வரும் போது அவர் ஒருபோதும் பின்வாங்குவதில்லை. எப்போதும் சேஃப் ஸோனில் இருப்பதை விரும்பாத ராதிகா, சவாலான ரோல்களைகே பெரும்பாலும் தேர்ந்தெடுப்பார்.

இந்நிலையில், பார்கா தத் தொகுத்து வழங்கிய ’வீ தி வுமன் பேனலில்’, எந்த மாதிரியான படங்களை நீங்கள் நிராகரிக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு நகைச்சுவை மற்றும் ஆபாச நகைச்சுவை படங்களை தான் நிராகரிப்பதாகக் கூறினார் ராதிகா. அதோடு ’பட்லாபூர்’ படத்தில் கவர்ச்சியான காட்சிகளில் நடித்ததன் மூலம், தான் அனுபவித்து வரும் தொல்லைகளைப் பற்றி முதன் முறையாக வாய் திறந்தார்.

படத்தில், தனது கணவர் கொல்லப்படுவதிலிருந்து காப்பாற்ற அப்படி நடிக்க வேண்டியதாக அந்த கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருந்தது. அந்தப் படத்தில் அப்படி தைரியமாக நடித்ததால், பாலியல் நகைச்சுவை படங்களில் சாதாரணமாக தயாரிப்பாளர்கள் ராதிகாவை தேர்வு செய்தார்களாம். இதனால் நிறைய திரைப்பட சலுகைகளை தான் நிராகரிக்க வேண்டியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் தொடர்ந்த ராதிகா, ”’முற்போக்கான’ எழுத்து என்ற பெயரில் எதையும் ஈஸியாக எழுதி விடுகிறார்கள். அப்படி நான் உணரும் போது, அந்தப் படத்தை நிராகரித்து விடுவேன். சில சமயங்களில் என் வாழ்க்கையில் இது நல்லதாகவும் அமைந்தது” என்றார்.

மெரினாவில் நுரை தள்ளியதற்கு அரசு அலட்சியம் காரணமா?

நடிகர் கார்த்தியுடன் ’ஆல் இன் ஆல் அழகுராஜா’, ரஜினியுடன் ‘கபாலி’ உள்ளிட்ட சில தமிழ் படங்களில் ராதிகா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Radhika apte badlapur sex comedy movies

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X