தனக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து நடிகை விசித்ரா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசியிருந்த நிலையில், மேலும் ஒரு பிரபல நடிகை உச்ச நட்சத்திரம் ஒருவர் மீது பாலியல் தொந்தரவு புகார் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 50 நாட்களை நிறைவு செய்த போட்டியாளர்களுக்கு, அவர்களின் வாழ்க்கையில் நடந்த பூகம்பம் பற்றி பேச ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது.
இந்த டாஸ்கில் பேசிய விசித்ரா, 2001 ஆம் ஆண்டு ஒரு தெலுங்கு திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது பாலியல் தொந்தரவு ஏற்பட்டது. சென்னை திரும்பிய பிறகு இந்த சம்பவம் குறித்து நடிகர்கள் சங்கத்தில் புகார் செய்திருந்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே நேரத்தில் காவல் நிலையத்திற்கு செல்லாமல் நடிகர் சங்கத்தில் புகார் செய்வது ஏன் என்று கேட்டனர்.
அதேபோல் கேரளாவில் உள்ள மலம்புழாவில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, படத்தில் தன்னுடன் பணியாற்றிய ஒருவர் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டார். அந்த படத்தின் படத்தின் ஹீரோ முதலில் என்னை சந்தித்தபோது, படத்தில் நடிக்கிறீங்களா என்று விசாரித்துவிட்டு, நைட்டு நீ என் ரூமுக்கு வா என்று சொன்னார். ஆனால் நான் அவரது அறைக்கு செல்லவில்லை. அன்றில் இருந்து தினமும் மாலை மற்றும் இரவு நேரத்தில் பல ஆண்கள் என்னை தொந்தரவு செய்தனர்.
ஒரு கட்டத்தில் மாலை மற்றும் இரவு நேரங்களில் எனது அறைக் கதவு எப்பொழுதாவது தட்டப்படும் என்று தெரிந்ததால், இந்த துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க ஒவ்வொரு நாளும் எனது அறையை மாற்றிக்கொண்டே இருந்தேன். அதன்பிறகும் படத்தின் படப்பிடிப்பின் போது என்னை தகாத முறையில் தொட்டனர். இந்த பிரச்சனையை இயக்குனரிடம் எடுத்துரைத்தபோது, அவர் அறைந்துவிட்டார். அன்றுடன் நான் சினிமாவை விட்டு விலகிவிட்டேன் என்று தனது கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
இதனிடையே விசித்ரா தெலுங்கு படத்தில் பணியாற்றியபோது, ஸ்டண்ட் காட்சி படமாக்கப்படும்போது ஒரு துணை நடிகர் தன்னிடம் பாலியல் நோக்கத்துடன் நடந்துகொண்டதாகவும், அவரை அந்த ஸ்டண்ட் இயக்குனரிடம் பிடித்து கொடுத்தபோதும் அவர் தனது கன்னத்தில் அறைந்தார் என்றும் கூறியிருந்தார். விசித்ராவின் இந்த பேச்சை வைத்து நெட்டிசன்கள் பலரும் இது என்ன படம் என்பதை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த படம், பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான பலேவடிவி பாசு என்ற படத்தில் நடந்தாகவும், இந்த படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக விஜய் பணியாற்றியதாகவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2017/06/radhikaapte759.jpg)
இந்தநிலையில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணாவுடன் ஒரு படத்தில் நடித்துள்ள, நடிகை ராதிகா ஆப்தே தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து கூறியுள்ளார். ராதிகா ஆப்தே தெலுங்கு சினிமாவில் தனக்கு பாலியல் தொல்லை நேர்ந்ததாகவும், ஆணாதிக்கம் அதிகம் இருப்பதாகவும், ஹீரோக்கள் கடவுள் போல் பார்க்கப்படுகிறார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும், ஒரு வயது மூத்த நடிகர் தன்னிடம் முதுகு தேய்த்துவிடுவதாக கூறினார் என்றும் ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“