Advertisment

ராதிகா நடிக்கும் புத்தம் புது சீரியல் தாயம்மா... புது வேகம் எடுக்கும் பொதிகை டிவி

தமிழ் டிவி சீரியல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி, நடிகை ராதிகா சரத்குமார் நடிக்கும் புத்தம் புது சீரியல் 'தாயம்மா' விரைவில் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

author-image
WebDesk
New Update
Radhika Sarathkumar

நடிகை ராதிகா சரத்குமார்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ் டிவி சீரியல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி, நடிகை ராதிகா சரத்குமார் நடிக்கும் புத்தம் புது சீரியல் 'தாயம்மா' விரைவில் பொதிகை டிவியில் விரைவில் தொடங்கப்பட உள்ளது. பொதிகை டிவி சீரியல் புதுப்புது சீரியல்கள் மூலம் புது வேகமெடுத்து பார்வையாளர்களை ஈர்க்க திட்டமிட்டுள்ளது. 

Advertisment

நடிகை ராதிகா சரத்குமார் சீரியல்களில் நடிக்காமல் விலகி இருந்த நிலையில், பொதிகை டிவியில் விரைவில் தொடங்கப்பட உள்ள  ‘தாயம்மா’ சீரியலில் நடிக்க உள்ளார். 1990-களில் தமிழ்நாடு முழுவதும் பார்வையாளர்களைக் கட்டியாண்ட தூர்தர்ஷன் பொதிகை டிவி மீண்டும் புதுவேகமெடுக்க திட்டமிட்டுள்ளது. அதனால், பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக பொதிகை டிவி புத்தம்புது சீரியல்களை ஒளிபரப்ப திடமிட்டுள்ளது. 

அந்த வகையில், நடிகை ராதிகா சரத்குமார் நடிக்கும் ‘தாயம்மா’ என்ற சீரியல் பொதிகை டிவியில் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதனால், டிவி சீரியல் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த சீரியலில் ராதிகாவின் ராடான் மீடியா தயாரிக்கிறது.

தாயம்மா சீரியல் குடும்பக் கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ராதிகா சரத்குமார், இந்த சீரியலில் இரண்டு மகள்களின் தாயாக முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இரண்டு மகள்களை வளர்ப்பதில் சிரமப்படும் ஒரு தாய் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி தாயம்மா சீரியல் பேசும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த சீரியலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பொம்மி முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Radhika Sarathkumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment