வேலூரில் நாராயணி மருத்துவமனை சார்பில் நடைபெற்ற உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு தின விழாவில் பங்கேற்ற நடிகை ராதிகா சரத்குமார், இளம் பெண்கள் யாரையும் நம்பி செல்போனில் பேசி காதலில் மூழ்கி ஏமாறாதீர்கள் என்று அறிவுரை வழங்கினார்.
வேலூர், அரியூரில் உள்ள பிரபல நாராயணி மருத்துவமனையின் சார்பில் உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு தினம் மருத்துவமனையின் இயக்குநர் பாலாஜி தலைமையில் திங்கள்கிழம (நவம்பர் 27) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகை ராதிகா சரத்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழிப்புணர்வு விழாவை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் திரளான செவிலியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர். மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நீரிழிவு நோய் விழிப்புணர்வு கையேட்டினை ராதிகா வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அப்ப்போது நடிகை ராதிகா சரத்குமார் பேசியதாவது: “தற்போது இளைஞர்களும், இளம் பெண்களும் கைபேசியில் மூழ்கி விடுகின்றனர். அதனை தவிர்க்க வேண்டும்.மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகளவில் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த நிகழ்ச்சியில், ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வது தான் நடக்கிறது. மேலும் யாரையும் நம்பி கைபேசியில் பேசி காதலில் மூழ்கி ஏமாறாதீர்கள். பெண்கள் சுய நலமற்றவர்கள் இருப்பினும் பெண்கள் அவரவர் உடல் நலனிலும் அக்கறை செலுத்த வேண்டும்.
மாதம் ஒரு முறையாவது ரத்தம் மற்றும் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உங்களின் உடல் நலனில் அக்கறையை செலுத்துங்கள்” என நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“