Advertisment

விரைவில் ஒளிபரப்பாகும் ராதிகாவின் புதிய சீரியல்; எந்த சேனலில் தெரியுமா?

சிறிய இடைவெளிக்குப் பிறகு ராதிகா நடிப்பில் வெளியாகும் புதிய சீரியல்; ஒளிபரப்பு உரிமத்தைப் பெற்ற பிரபல டிவி

author-image
WebDesk
New Update
actress Radhika sarathkumar, Dr Kaandharaaj comments on actress Radhika, ராதிகா, ராதிகா சரத்குமார், தமிழ் சமூகம் குட்டிச் சுவராக மாற ராதிகா முக்கிய காரணம், பிரபல விமர்சகர் டாக்டர் காந்தராஜ் அதிரடி, Dr kaandharaaj comments on Radhika, Radhika Sarathkumar

சிறிய இடைவெளிக்குப் பிறகு ராதிகா நடிப்பில் வெளியாகும் புதிய சீரியல்; ஒளிபரப்பு உரிமத்தைப் பெற்ற பிரபல டிவி

நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள புதிய சீரியல், முன்னணி சேனலில் விரைவில் வெளியாகவுள்ளது.

Advertisment

1978 இல் கிழக்கே போகும் ரயில் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராதிகா. பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து கொடி கட்டி பறந்தார். பின்னர் சின்னத்திரையிலும் பல்வேறு சீரியல்களில் நடித்தார். இவரது தந்தை எம்.ஆர்.ராதா, சகோதரர் ராதாரவி, சகோதரி நிரோஷா ஆகியோரும் திரைத்துறை பிரபலங்களே.

ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட தமிழின் முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்தவர் ராதிகா. 80, 90களில் ஹீரோயினாக கொடிகட்டி பறந்தவர், தற்போது குணச்சித்திர வேடங்களிலும் கலக்கி வருகிறார். இதற்கிடையில் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமாரை திருமணம் செய்துக் கொண்டார். தற்போதும் வெள்ளித்திரை, சின்னத்திரை என பிசியாக நடித்து வருகிறார்.

சின்னத்திரையை பொறுத்தவரை சித்தி சீரியல் மூலம் அறிமுகமான ராதிகா, தொடர்ந்து அண்ணாமலை, செல்லமே, வாணி ராணி, சந்திரகுமாரி உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார். இருப்பினும் சமீபகாலமாக சீரியலில் நடிக்காமல் இருந்த ராதிகா, சமீபத்தில் புதிய சீரியலில் நடிக்கத் தொடங்கினார்.

தனது சொந்த நிறுவனமான ரேடான் மீடியா தயாரிப்பில் தாயம்மா சீரியலில் நடிக்கத் தொடங்கினார் ராதிகா. இந்த சீரியல் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் என்று கூறப்பட்ட நிலையில், பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது கலைஞர் தொலைக்காட்சி தாயம்மா சீரியலை ஒளிப்பரப்பும் உரிமையை பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் தாயம்மா சீரியல் கலைஞர் டிவியில் ஒளிப்பரப்பாகும் நேரம் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Radhika Sarathkumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment