/tamil-ie/media/media_files/uploads/2023/08/Radhika-1.jpg)
விரைவில் முடிவுக்கு வருகிறது ராதிகா சரத்குமார் சீரியல்; மிகுந்த ஏமாற்றத்தில் ரசிகர்கள்
நடிகை ராதிகா சரத்குமார் நடித்து வரும் பொன்னி C/o ராணி சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளது.
1978 இல் கிழக்கே போகும் ரயில் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராதிகா. பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து கொடி கட்டி பறந்தார். பின்னர் சின்னத்திரையிலும் பல்வேறு சீரியல்களில் நடித்தார். இவரது தந்தை எம்.ஆர்.ராதா, சகோதரர் ராதாரவி, சகோதரி நிரோஷா ஆகியோரும் திரைத்துறை பிரபலங்களே.
ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட தமிழின் முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்தவர் ராதிகா. 80, 90களில் ஹீரோயினாக கொடிகட்டி பறந்தவர், தற்போது குணச்சித்திர வேடங்களிலும் கலக்கி வருகிறார். இதற்கிடையில் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமாரை திருமணம் செய்துக் கொண்டார். தற்போதும் வெள்ளித்திரை, சின்னத்திரை என பிசியாக நடித்து வருகிறார்.
சின்னத்திரையை பொறுத்தவரை சித்தி சீரியல் மூலம் அறிமுகமான ராதிகா, தொடர்ந்து அண்ணாமலை, செல்லமே, வாணி ராணி, சந்திரகுமாரி உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார். இருப்பினும் சமீபகாலமாக சீரியலில் நடிக்காமல் இருந்த ராதிகா, சமீபத்தில் புதிய சீரியலில் நடிக்கத் தொடங்கினார்.
இந்தநிலையில், கலைஞர் தொலைக்காட்சியில் பொன்னி C/o ராணி சீரியலில் ராதிகா சரத்குமார் நடித்து வருகிறார். இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகும் இந்த சீரியலில் ப்ரீத்தி, சஞ்சீவ் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ராதிகா சிறப்பு தோற்றத்தில் நடித்து வரும் இந்த சீரியல், வாணி ராணி சீரியலின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், கடந்த ஜூன் 22 முதல் ஒளிப்பரப்பாகி வரும் பொன்னி C/o ராணி சீரியல் விரைவில் முடிவடைய உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.