சின்னத்திரையில் இருந்து விலகி முழுநேர அரசியல்: ராதிகா திடீர் அறிவிப்பு

நடிகை ராதிகா சரத்குமார், சின்னத்திரையில் இருந்து சிறிது சிறிதாக விலகி முழுமூச்சுடன் அரசியலில் ஈடுபட உள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்தார்.

radhika sarathkumar, radhika, radhika sarathkumar, sarathkumar, sarath kumar, samaththuva makkal katchi, ராதிகா சரத்குமார், ராதிகா, சமத்துவ மக்கள் கட்சி, ராதிகா சரத்குமார், சீரியல்களில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட திட்டம்

நடிகை ராதிகா சரத்குமார், சின்னத்திரையில் இருந்து படிப்படியாக விலகி முழுமூச்சுடன் அரசியலில் ஈடுபட உள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் சமத்துவ மக்கள் கட்சியின் வேலூர் மண்டல நிவாகிகள் ஆளோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், அக்கட்சியின் மகளிரணி செயலாளரும் நடிகையுமான ராதிகா சரத்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் மத்தியில் ராதிகா சரத்குமார் பேசியதாவது: “தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருந்தனர். அப்போது சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள் பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு உதவிகள் செய்தனர். அதேநேரத்தில், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவர் குணமடைய வேண்டும் என்று அவருக்காக சாதி மதம் பாராமல் அனைவரும் சிறப்பு பிரார்த்தனைகள் செய்ததற்காக முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

2021ம் ஆண்டில் தமிழகத்தில் ஒரு புதிய விடியலை ஏற்படுத்த வேண்டும். 2 முக்கிய தலைவர்கள் இல்லாத நிலையில் நடைபெறும் இந்த தேர்தலில் நாம் ஆனைவரும் ஒருங்கிணைந்து தேர்தலில் வெற்றிபெற பாடுபட வேண்டும். நான் வருகிறகிற தேர்தலில் முழுமையாக ஈடுபட உள்ளேன். அதற்காக சின்னத்திரையில் நான் நடித்துவரும் சீரியல்கள் அனைத்திலிருந்தும் படிப்படியாக விலகி முழுமூச்சுடன் ஈடுபட உள்ளேன்” என்று கூறினார்.

நடிகை ராதிகா சரத்குமார் டிவி சீரியல்கலில் படிப்படியாக விலகி சின்னத்திரைக்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலில் முழுமூச்சுடன் ஈடுபட உள்ளேன் என்று கூறியிருப்பது தமிழக அரசியலிலும் கோலிவுட்டிலும் கவனத்தைப் பெற்றுள்ளது.

நடிகவேல் எம்.ஆர்.ராதாவின் மகளான நடிகை ராதிகா பாரதிராஜாவின் இயக்கத்தில் கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் தமிழ் சினிமா உலகுக்குள் அறிமுகமானார். 1980-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த ராதிகா, பின்னர் தொலைக்காட்சி சீரியல்களில் நுழைந்து அங்கேயும் வெற்றிக்கொடி நாட்டினார்.

ராதிகா தனது ராடான் மீடியா நிறுவனம் மூலம் டிவி சீரியல்களைத் தயாரித்து வருகிறார். அதே நேரத்தில், சினிமாவிலும் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு ராதிகாவும் சரத்குமாரும் இணைந்து நடித்த வானம் கொட்டட்டும் திரைப்படம் கவனத்தைப் பெற்றது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Radhika sarathkumar wants to releave from tv serials then involved in politics full time

Next Story
இதைப் பார்க்க சித்ரா இல்லையே..! பெற்றோருக்கு கிடைத்த ஆறுதல் கவுரவம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com