சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சித்தி 2 சீரியலில் இருந்து நடிகை ராதிகா விலகிய நிலையில், அவர் நடித்த சாரதா அம்மா காதாபாத்திரத்தில் நடிக்க உள்ள பிரபல நடிகைகளின் பெயர் விவாதிக்கப்பட்டு வருகிறது.
தொலைக்காட்சி வரலாற்றில் முதல் ஹிட் அடித்த சீரியல் என்றால் அது ராதிகா முக்கிய வேடத்தில் நடித்து சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி சீரியல்தான். அதற்குப் பிறகு பல சீரியல்கல் மிகப்பெரிய புகழ்பெற்றாலும் சித்தி சீரியல் நினைவுகள் இன்னும் டிவி சிரியல் ரசிகர்களின்
மனதில் பசுமையாக அப்படியேதான் இருக்கிறது. அதனால்தான், சன் டிவியில் சித்தி 2 சீரியல் ஒளிபரப்பட்டது. சித்தி 2 தொடரிலும் நடிகை ராதிகாவே நடித்தார்.
நடிகை ராதிகா, சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்தாலும், மற்றொரு பக்கம் தொலைக்காட்சி சீரியலிலும் நடித்து வருகிறார். தனது ராடன் மீடியா மூலம் சீரியல்களையும் தயாரித்து வருகிறார்.
அதே நேரத்தில், நடிகை ராதிகா தனது கணவர் சரத்குமார் தலைவராக இருக்கிற சமத்துவ மக்கள் கட்சியில் மகளிர் அணி செயலாளராகவும் உள்ளார். அண்மையில், சமத்துவ மக்கள் கட்சி கூட்டத்தில் பேசிய நடிகை ராதிகா, தான் சீரியல்களில் இருந்து படிப்படியாக விலகி முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாகக் கூறினார். அப்போதே ராதிகா சீரியல்களில் இருந்து விலகுவார் என்று பேசப்பட்டது.
இந்த நிலையில், நடிகை ராதிகா சித்தி 2 சீரியலில் இருந்து விலகியதை சீரியல் குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்தார். ராதிகாவின் ரசிகர்கள் பலரும் அவரை மீண்டும் சீரியலில் எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர்.
/tamil-ie/media/media_files/uploads/2021/02/ramya-meena-devayani-300x166.jpg)
இந்த நிலையில், சித்தி 2 சீரியலில் ராதிகா நடித்த சாரதா அம்மா கதாபாத்திரத்தில் அவருக்கு பதிலாக யார் நடிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது. அந்த கதாபாத்திரத்தில் புகழ்பெற்ற நடிகை நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்பதால் 3 முன்னணி நடிகைகளின் பெயர் விவாதிக்கப்பட்டு வருகிறது.
சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்ததோடும் டிவி சீரியல்களிலும் வெற்றிக்கொடி நாட்டிய நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், மீனா, தேவையாணி ஆகிய மூன்று நடிகைகளின் பெயர்களை சித்தி 2 சீரியலில் ராதிகாவின் சாரதா அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அதனால், சித்தி 2 சீரியலில் ராதிகாவின் சாரதா அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது ரம்யா கிருஷ்ணனா, மீனாவா, தேவையாணியா என்பது விரைவில் தெரியவரும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"