/indian-express-tamil/media/media_files/BozkazSQLNDSFZ11IlBw.jpg)
Radikaa Sarathkumar and Sivakumar
நடிகை ராதிகா காலில் அடிபட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், நடிகர் சிவகுமார் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ள ராதிகா, நீண்டகாலமாக பிரபலமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.
ராடன் மீடியா என்ற நிறுவனத்தின் நிறுவனராகவும் இருக்கிறார். இதன் மூலம் திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களையும் தயாரித்து வருகிறார்.சின்னத்திரையில் "சித்தி" தொடர் மூலம் முத்திரை பதித்தவர்.
2021 முதல் சமத்துவ மக்கள் கட்சியின் துணை பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். தற்போது விருதுநகர் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக ராதிகா களமிறங்கியுள்ளார்.
தற்போது ராதிகா காலில் அடிபட்டு நடக்க முடியாமல் வீட்டில் ஓய்வில் இருக்கிறார்.
இதை அறிந்த நடிகர் சிவகுமார், ராதிகாவின் வீட்டிற்கு நேரில் சென்று, அவரை பார்த்து நலம் விசாரித்தார். அப்போது எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை ராதிகா தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார்.
ராதிகா மற்றும் சிவகுமார் "பாடாத தேனீக்கள்" திரைப்படத்தில் அண்ணன் தங்கையாக நடித்தனர். அந்த படத்தில் வரும் "வண்ண நிலவே" என்ற பாடலின் வரிகளோடு அந்த வீடியோவை பகிர்ந்த ராதிகா, அதில், ”சிவகுமார் அண்ணா, நான் காலில் சிகிச்சை பெற்று குணமடைந்து வருவதால் என்னை வந்து பார்த்ததில் மகிழ்ச்சி. நாங்கள் படங்களையும் நினைவுகளையும் பேசி பகிர்ந்து கொண்டோம். இந்த படத்தில் இருக்கும் சிறுமி சுஜிதா தனுஷ்” என்று பதிவிட்டுள்ளார்.
அதைப் பார்த்த ரசிகர்கள், ராதிகா விரைவில் நலம் பெற வாழ்த்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.