ரஜினி படத்தில் லாரன்ஸ்: கொரோனாவுக்கு 3 கோடி நிவாரணம்!

தான் பெற்ற அட்வான்ஸ் பணத்தை கொரோனா வைரஸ் நிவாரண நிதிகளுக்காக ஒதுக்கியுள்ளார் லாரன்ஸ்.

By: Updated: April 10, 2020, 09:20:02 AM

Raghava Lawrence: நடன இயக்குநர், நடிகர், இயக்குநர், என பன்முகத்திறமைகளைக் கொண்டவர் ராகவா லாரன்ஸ். மாற்றுத் திறனாளிகள், வறுமையில் வாடுபவர்கள் ஆகியோருக்கு உதவிகளை வாரி வழங்குவதில் வல்லவர்.

கணக்கு படிக்கவேண்டியது நீங்கள்தான் – மதுவந்திக்கு நெட்டிசன்கள் கோரிக்கை

தற்போது இரண்டு பெரிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து, பி.வாசு இயக்கிய ‘சந்திரமுகி’, திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது அதன் அடுத்த பாகத்தில் லாரன்ஸ் நடிக்கவிருக்கிறார். ரஜினியும் அனுமதியும், ஆசீர்வாதத்துடனும் இதைத் தான் தெரிவிப்பதாக ட்விட்டரில் குறிப்பிட்டிருக்கிறார் லாரன்ஸ்.

இந்த சந்திரமுகி 2 படத்தை, சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதற்காக தான் பெற்ற அட்வான்ஸ் பணத்தை கொரோனா வைரஸ் நிவாரண நிதிகளுக்காக ஒதுக்கியுள்ளார் லாரன்ஸ். பிரதமரின் நிவாரண நிதிக்கு 50 லட்சம், முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்சம், ஃபெஃப்ஸிக்கு 50 லட்சம், டான்சர்ஸ் யூனியனுக்கு 50 லட்சம், மாற்று திறனாளி குழந்தைகளுக்கு 25 லட்சம் மற்றும் லாரன்ஸ் பிறந்த இடமான ராயபுரத்திலுள்ள, தினசரி கூலி தொழிலாளர்களுக்கு 75 லட்சம் என மொத்தம் 3 கோடி ரூபாய் நிவாரணத் தொகையை அவர் அறிவித்துள்ளார்.

சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்: மாவட்டங்களில் நிலைமை எப்படி?

அறக்கட்டளைகள் மூலம் பல சேவைகளை செய்து வரும் லாரன்ஸின் இந்த உதவி அளப்பரியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Raghava lawrence chandramuki 2 coronavirus donation

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X