scorecardresearch

பேய் படத்துக்கு பிரேக்: சூப்பர் ஹீரோவாகும் ராகவா லாரன்ஸ்!

Raghava Lawrence: காஞ்சனா பட வரிசைகளின் மூலம் குழந்தைகளை கவர்ந்த லாரன்ஸின் அடுத்த முயற்சி தான் இந்த சூப்பர் ஹீரோ கதாப்பாத்திரமாம்.

raghava lawrence next movie, raghava lawrence kanchana 3, sun pictures movie, lawrence 3d movie
ராகவா லாரன்ஸ்

Raghava Lawrence’s Next: நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் என பன்முகத் தன்மைக் கொண்ட ராகவா லாரன்ஸ் கடந்த 2007-ம் ஆண்டு, ‘முனி’ படத்தைத் தொடங்கினார். ஹாரர் த்ரில்லர் படமான இதற்கு ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு அளித்தனர்.

இதனால் அதன் அடுத்தடுத்த பாகங்களை காஞ்சனா, காஞ்சனா 1, காஞ்சனா 2, காஞ்சனா 3 என்ற பெயரில் இயக்கினார். இவை அனைத்துமே சிறப்பான வெற்றி பெற்றது. இந்நிலையில் மீண்டும் லாரன்ஸும் சன் பிக்சர்ஸும் இணைய இருக்கிறார்கள். ஆனால் இந்த முறை ஹாரர் படம் கிடையாது. மிகப்பெரும் பொருட்செலவில் 3டி தொழில் நுட்பத்தில் உருவாகும் இந்தப் படத்தில் சூப்பர் ஹீரோ வேடமேற்கிறார் லாரன்ஸ். காஞ்சனா பட வரிசைகளின் மூலம் குழந்தைகளை கவர்ந்த லாரன்ஸின் அடுத்த முயற்சி தான் இந்த சூப்பர் ஹீரோ கதாப்பாத்திரமாம். இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தவிர, காஞ்சனா படத்தை இந்தியில் ‘லக்‌ஷ்மி பாம்’ என்ற பெயரில் ரீமேக் செய்துக் கொண்டிருக்கிறார் லாரன்ஸ். அதில் அக்‌ஷய் குமார் மற்றும் கியாரா அத்வானி முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

 

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Raghava lawrence kanchana 3 super hero 3d movie