’தலைவர் தொடர்பான எந்த விழாவிலும் அவர் அனுமதியில்லாமல் கலந்துக் கொள்ள மாட்டேன்’ – ராகவா லாரன்ஸ்

Superstar Rajinikanth: இனிமேல் நான் தலைவர் தொடர்பான எந்த விழாவிலும் அவரது அனுமதியின்றி கலந்து கொள்ள மாட்டேன்.

By: Updated: December 23, 2019, 03:35:26 PM

Raghava Lawrence’s latest Statement : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்பார்’ ஆடியோ வெளியீட்டில் ராகவா லாரன்ஸ் பேசியதிலிருந்து, நடிகர் கமல்ஹாசன் ரசிகர்கள் மற்றும் சீமானின் பின் தொடர்பாளர்களால் சர்ச்சையில் சிக்கிக் கொண்டார், நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ்.

திமுக கூட்டணி சார்பில் CAAவை எதிர்த்து பேரணி…

அவர் தற்போது ஓர் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளார், அதில்  இதுவரை தான் பேசியதற்கும், எதிர்கால பேச்சுகளுக்கும் நடிகர் ரஜினிக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார். ரஜினி தனது கருத்துக்களை லாரன்ஸ் மூலம் பரப்புகிறார் என்றொரு கருத்து நிலவிய நிலையில், நடிகரும் இயக்குனருமான லாரன்ஸ் அதனை மறுத்துள்ளார். ”தலைவருக்கு அதைச் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும், மனதில் பட்டதை பேசும் தைரியம் அவருக்கு இருப்பதாகவும்” கூறி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

”தீவிர ரசிகனாக நான் ரஜினியிடமிருந்து தான் பெற விரும்புவது அவருடைய ஆசீர்வாதமும், முடிந்தவரை அவருடன் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பும் தான். நான் எந்தவொரு அரசியல் கட்சியையும் ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை. ஆதரவற்ற இல்லங்கள் மற்றும் பிற சமூக சேவைகளை நடத்துவதற்கு உதவி தேவைப்பட்டால் மட்டுமே அரசியலில் இருப்பவர்களை அணுகுவதாகவும்” அவர் கூறினார்.

”இனிமேல் நான் தலைவர் தொடர்பான எந்த விழாவிலும் அவரது அனுமதியின்றி கலந்து கொள்ள மாட்டேன். நான் பகிர்ந்து கொள்ள விரும்பாத பல காரணங்கள் இதற்கு பின்னால் உள்ளன.
எனக்கு மற்ற எல்லாவற்றையும் விட அவருடைய ஆசீர்வாதமே போதும்” என்றும் லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Raghava lawrence official statement on superstar rajinikanth

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X