Kanchana 3 Trailer: நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தற்போது இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் ‘காஞ்சனா 3’.
Advertisment
2007-ம் ஆண்டு இவர் இயக்கிய ஹாரர் காமெடி படமான ’முனி’ பெரு வெற்றியடையவே, அதன் வரிசையில் தொடர்ந்து படம் இயக்க ஆரம்பித்தார் லாரன்ஸ்.
முனியின் இரண்டாம் பாகமான காஞ்சனாவை 2011-ல் இயக்கினார். பின்னர் முனியின் 3-ம் பாகத்தை, ’காஞ்சனா 2’வாக 2015-ல் வெளியானது.
இதைத் தொடர்ந்து தற்போது முனி படத்தின் 4-ம் பாகமான ’காஞ்சனா 3’ விரைவில் வெளியாகவிருக்கிறது.
Advertisment
Advertisements
இதில் முதல் பாகத்தில் ஹீரோயினாக நடித்த, வேதிகாவே ஹீரோயினாக நடிக்க, இன்னொரு ஹீரோயினாக ஓவியா நடித்துள்ளார்.
முந்தைய பாகங்களில் நடித்துள்ள கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் ஆகியோர் இதிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஆடை வடிவமைப்பாளராக நிவேதா ஜோசப் பணியாற்றியிருக்கும், காஞ்சனா 3 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வெற்றி ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட்டராகப் பணியாற்றியிருக்கிறார். தற்போது இதன் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
முழுக்க முழுக்க திகிலூட்டும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும் இந்த ட்ரைலரில் வயதானவர் தோற்றத்தில் தோன்றுகிறார் லாரன்ஸ்.
“எனக்கு ஒண்ணுன்னா விட்டுட்டு போவேன், என் பசங்களுக்கு ஒண்ணுன்னா வெட்டிட்டு தான்டா போவேன்”
“நெருப்பக் கூட தொடலாம், கற்ப தொடக் கூடாது”
“நீ மாஸ்னா நான் டபுள் மாஸ்” போன்ற பஞ்ச் டயலாக்குகளும் இதில் இடம் பெற்றுள்ளன.
எப்போதுமே முனி வரிசைப் படங்கள் கோடை விடுமுறைக்கு தான் வெளியாகும், அந்த வகையில் காஞ்சனா 3-யும் இவ்வருட கோடையை குதூகலமாக்க வருகிறது.
படம் வெளியாகி முனி, காஞ்சனா ரசிகர்களை கவர்கிறதா என்பதை பொறுத்திருப் பார்ப்போம்.