By: WebDesk
March 24, 2018, 6:50:02 PM
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரிதா சிங் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
’தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் கார்த்தி ஜோடியாகவும், ’சிலந்தி’ மகேஷ்பாபுவுக்கும் ஜோடியாக நடித்தவர் ராகுல் ப்ரிதா சிங். தெலுங்கில் முன்னணி காதாநாயகியான இவருக்கு, நடிகர் சிவகார்த்திகேயன் படத்தில் ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
சிவகார்த்திகேயன் பொன்ராம் இயக்கத்தில் சீமராஜ் படத்தில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து, ரவிக்குமார் இயக்கத்தில் பெயரிடாத படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தினை 24ஏம் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ராகுல் ப்ரிதா சிங் நடிக்க இருப்பதாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை நிரவ் ஷாவும், கலை பணிகளை முத்துராஜும் மேற்கொள்ள இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதில் கலை இயக்குநர் முத்துராஜ் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான வேலைக்காரன் படத்தில் கலை பணிகளை கவனித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல் இந்த படத்துக்கு இசை அமைப்பாளராக இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Rahul pritha singh to pair with sivakarthikeyan