raiza wilson want to date with harish kalyan - 'தமிழகத்தின் நலனுக்காக அந்த நடிகருடன் டேட்டிங் செல்ல விரும்புகிறேன்' - ரைசா வில்சன்
தமிழகத்தின் நலனுக்காக நடிகர் ஒருவருடன் டேட்டிங் செய்யப்போகிறேன் என பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரைசா வில்சன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருக்கிறார்.
Advertisment
பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி பின்னர் அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து 'பியார் பிரேமா காதல்' என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு முன்னதாகவே விஐபி 2 படத்தில், நடிகை கஜோலின் உதவியாளராக ரைசா நடித்திருந்தார்.
தற்போது 'அலைஸ்', 'எப்.ஐ.ஆர்' மற்றும் 'காதலிக்க நேரமில்லை' போன்ற படங்களில் ரைசா நடித்து வருகிறார்.
அதைத் தொடர்ந்து தற்போது ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘தனுசு ராசி நேயர்களே’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் அவருடன் இணைந்து நடித்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார். இந்நிலையில், ரைசா வில்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழகத்தை மகிழ்ச்சியாக வைக்க ஹரிஷ் கல்யாணுடன் டேட்டிங் செய்ய விரும்புகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
I want to start dating @iamharishkalyan just to make TN happy ❤️ love for love ❤️
ஏற்கனவே, ஹரீஷ் கல்யாணும், ரைசாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாக செய்திகள் உலா வரும் நிலையில், தற்போது ரைசாவின் இந்த ட்வீட் ரசிகர்களை குழப்பமடைய வைத்திருக்கிறது.
அடடா! தமிழ்நாட்டு நலனுக்கு என்னவெல்லாம் செய்யுறாங்க!!