/indian-express-tamil/media/media_files/2025/06/18/serial-actress-rihama1-2025-06-18-20-37-43.jpg)
சீரியல் நடிகை ரிஹானா
பிரபல தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் சீரியல் நடிகையாக இருந்து வருபவர் ரிஹானா பேகம். இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு ரிஹானா, மீது சென்னை பூந்தமல்லி, காவல் நிலையத்தில் தொழிலதிபர் ராஜ்கண்ணன் மோசடி புகார் அளித்து இருந்தார். தொழிலதிபர் ராஜ் கண்ணன், நடிகை ரிஹானா மீது மோசடி புகார் அளித்த நிலையில், பயில்வான் ரங்கநாதன் ரிஹானாவின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவரது செயல்கள் குறித்து விமர்சனங்களை முன்வைத்தார். இந்நிலையில் 2ண்ட் ஃபோர் தமிழ் யூடியூப் பக்கத்திற்கு ராஜ்கண்ணன் கொடுத்த பேட்டியில் அவர் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
பிரபல சீரியல் நடிகை ரிஹானா பேகம் மீது தொழிலதிபர் ராஜ்கண்ணன் அளித்த பண மோசடி மற்றும் திருமண மோசடி புகார் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ராஜ்கண்ணன் தனது பேட்டியில் ரிஹானா குறித்து மேலும் பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார்.
ராஜ்கண்ணன் தனது பேட்டியில், " சிங்கிள் பேரண்ட் என்பதை அறிந்து ரிஹானா எனது நண்பர் மூலமாக அறிமுகமானார். எங்கள் வீட்டில் வந்து பேசினார். எனக்கும் குடும்பம் இல்லை என்பதால், திருமணப் பிரபோசலுடன் வந்த அவரை நான் ஏற்றுக்கொண்டேன். நானும் சினிமா துறையைச் சேர்ந்தவன் என்பதால், அவர் ஒரு நடிகையாக இருப்பது எனக்குப் பெரிய விஷயமாகத் தெரியவில்லை. இருப்பினும், அவர் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் சினிமாவுக்குள் வந்தார் என்பது பின்னர் தெரிந்தது. நான் பிறந்ததே சினிமா குடும்பத்தில். என் அப்பாவும் சினிமாக்காரர்தான்" என்று கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "கடந்த ஜூன் 20-ஆம் தேதி என் பிறந்தநாள் அன்று இரவு, 'நான்கு சுவர்களுக்குள் எனக்குத் தாலி கட்டினால் போதும்' என்று ரிஹானா கேட்டதால், நான் ரிக்வெஸ்ட்டின் பேரில் அதைச் செய்தேன். என் பிறந்தநாளை இனி நம் கல்யாண நாளாகக் கொண்டாடுவோம் என்றும் கூறினாள். ஆனால், தாலி கட்டிய மறுநாளே, 'எனக்குச் சொந்தமாக வீடு வாங்கிக் கொடுக்க வேண்டும். மொத்தமாகச் சொத்து வாங்கிக் கொடுக்க வேண்டும். நான் ஏகவல்லி மாதிரியும், பிரோஸ்கான் மாதிரியும் வாழ ஆசைப்படுகிறேன்' என்று சைக்கோ போல பேச ஆரம்பித்தார். என்னால் அந்த டிமாண்டுகளை ஏற்க முடியவில்லை. இதனால் அவர் வேறு வழியில் பணத்தை கேட்க ஆரம்பித்து, மங்களராணி என்பவரை வைத்து மிரட்ட ஆரம்பித்தார்" என்று வேதனையுடன் தெரிவித்தார்.
ராஜ்கண்ணன், ரிஹானாவின் கார் பெட்ரோல் செலவில் இருந்து, மருத்துவமனை செலவு, குழந்தைகளின் ஹாஸ்டல் ஃபீஸ் வரை அனைத்து செலவுகளையும் தானே ஏற்றதாகவும், சுமார் 18.5 லட்சம் ரூபாய் வரை தான் செலவழித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனது பொருட்கள் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் ரிஹானாவிடம் இருப்பதாகவும், தனது பணத்தைத் திரும்பப் பெறுவதற்காகவே இந்தப் புகாரை அளித்திருப்பதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.