scorecardresearch

Tamil Serial: சரவணனை பிரிந்த சந்தியா… அப்படியே பிக் பாஸ் 5-க்கு போய்டுவாங்களா?

பிக் பாஸ் போட்டியாளர்கள் பெயர்களில் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவாக நடிக்கும் ஆல்யா மானசா பெயரும் அடிபடுவதால், சரவணனை பிரிந்து செல்லும் சந்தியா பஸ்ஸில் அப்படியே பிக் பாஸ் 5-க்கு போய்டுவாங்களா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ராஜா ராணி 2 சீரியலில் ஹீரோ சரவணனும் ஹீரோயின் சந்தியாவும் பிரிகிறார்கள். பிக் பாஸ் சீசன் 5 தொடங்க உள்ளதால் அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் என்று உலாவரும் பட்டியலில் சந்தியாவாக நடிக்கும் ஆல்யா மானசா பெயரும் இடம்பெற்றுள்ளதால், சரவணனைப் பிரிந்து செல்லும் சந்தியா அப்படியே பஸ்ஸில் பிக் பாஸ் 5-க்கு போய்டுவாங்களா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ராஜா ராணி 2 சீரியலில் ஹீரோயின் சந்தியா கதாபாத்திரத்தில் ஆல்யா மானசா நடிக்கிறார். ஹிரோ சரவணன் கதாபாத்திரத்தில் நடிகர் சித்து நடிக்கிறார். இவர்களுடன், பார்வதியாக வைஷ்ணவி சுந்தர், சிவகாமியாக பிரவீனா, சைவம் ரவி சுந்தரமாகவும், அர்ச்சனாவாக வி.ஜே.அர்ச்சனாவும் நடிக்கிறார்கள். முதலில் சுமாராக சென்றுகொண்டிருந்த ராஜா ராணி 2 சீரியல், இப்போது முதல் பாகத்தைப் போல சூடு பிடித்து விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

விஜய் டிவியில் முன்னணி சீரியல்களில் ஒன்றான ராஜா ராணி 2 சீரியலில், படித்த சந்தியாவும் படிக்காத சரவணனும் சூழ்நிலையால் இருவருக்கும் திருமணம் ஆகிறது. சந்தியாவின் தோழி அவளுக்கே தெரியாமல் டிவோர்ஸ் பேப்பரை ஹேன்ட் பேக்கில் வைத்துவிடுகிறாள். டிவோர்ஸ் பேப்பரைப் பார்த்த சரவணன் தனது மனைவி சந்தியா தன்னிடம் இருந்து விவாகரத்து பெற்று செல்ல விரும்புவதாக தவறாக நினைத்துக்கொண்டு, அவள் நல்லபடியாக வாழ வேண்டும். அவளுடைய ஐபிஎஸ் கனவு நிறைவேற வேண்டும் என்று வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் தடுத்தாலும் அவளை வீட்டில் இருந்து அனுப்புகிறான்.

சந்தியாவை பஸ் ஏற்றுவதற்காக கூட்டுரோடுக்கு அழைத்துச் செல்கிறான். பிறகு, சந்தியாவை பஸ் ஏற்றி வைத்துவிட்டு மனதுக்குள் காதல் இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் தவிக்கிறான். சந்தியா சரவணனை விட்டு பிரிந்து செல்கிறாள்.

இந்த சூழலில்தான், விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விரைவில் தொடங்குகிறது. பிக் பாஸ் 5 புரமோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமில்லாமல் பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் என்று ஒரு யூகப் பட்டியல் சமூக ஊடகங்களில் உலா வருகிறது. அதில், ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவாக நடிக்கும் ஆல்யா மானசா பெயரும் உள்ளதால், சரவணனை பிரிந்து செல்லும் சந்தியா பஸ்ஸில் அப்படியே பிக் பாஸ் 5-க்கு போய்டுவாங்களா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

உண்மையில், ஆல்யா மானசா பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சில் போட்டியாளராக கலந்துகொள்கிறாரா இல்லையா என்பது நிகழ்ச்சி தொடங்கப்படும் என்று தெரிந்துவிடும். அதுவரை வெளியாகும் போட்டியாளர்களின் பட்டியல் எல்லாம் வட்டாரங்கள் சொல்வதாகவும் யூகங்களாகவும் மட்டுமே இருக்கும். ஒருவேளை ஆல்யா மானசா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போனால் ராஜா ராணி சீரியலில் ஹீரோயின் மாற்றம் செய்யப்படுவாரா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Raja rani 2 sandhya separate from saravanan alya manasa go to bigg boss 5