scorecardresearch

17 வயதில் மாடல்… இப்போது சீரியல் சிங்கப் பெண்! போராடி ஜெயித்த ஆல்யா மானசா

சீரியல் தொடரில் சாதனை படைக்கும் ஆலியா

Alya Manasa shares glowing skin beauty secret Tamil News
Alya Manasa Photoshoot

பல விமர்சனங்களை கடந்து தனிப்பட்ட வாழ்க்கையிலும் நடிப்பிலும் தனி முத்திரை பதித்து வருகிறார் ராஜா ராணி புகழ் ஆலியா மானசா.

தொலைக்காட்சிகளில் நடிக்கும் நடிகைகள் பலரும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளனர். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்ற தொடர் ராஜா ராணி. இதில் கதாநாயகியாக வந்து ரசிர்களை கவர்ந்தவர் செம்பா என்கிற கதாபாத்திரத்தில் நடித்த ஆலியா மானசா. விஜய் தொலைக்காட்சியில் இதுவரை ஒளிபரப்பான வரலாற்றில் வெற்றிகரமான சீரியல்களில் ராஜா ராணி சீரியலும் ஒன்று எனவும் கூறலாம். இந்த தொடரின் மூலம் இவருக்கு கிடைத்த பிரபலத்தை தொடர்ந்து பல விளம்பரங்களிலும் நடித்து புகழ் பெற்றார்.

ஆல்யா தனது 17 வயதில் மாடலாக அவரது வாழ்க்கை பாதையை தொடங்கி சிறிது காலம் ஆர் ஜே வாக இருந்தார். பிறகு நடன பயிற்றுவிப்பாளராக இருந்த ஆல்யா அவ்வபோது வெளியிடும் டான்ஸ் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி நல்ல வரவேற்பை பெறும். ராஜா ராணி தொடரில் நடிப்பதற்கு முன்பாகவே ஆல்யா கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றவர். அந்த நிகழ்ச்சியில் அவருடன் ஜோடியாக ஆடிய மானஸ் என்பவரை ஆல்யா மானஸா காதலித்து வந்தார். ராஜா ராணி சீரியலில் நடிக்க தொடங்கி சில மாதங்களில் இவர்களது காதல் முறிவடைந்தது. இவர்களது பிரிவுக்கு பல்வேறு கருத்து வேறுபாடுகள் காரணமாக சொல்லப்பட்டாலும் ராஜா ராணி சீரியல் சஞ்சீவை காதலித்து வந்ததுதான் காரணமாக கூறப்பட்டது. பிறகு சில மாதங்கள் கழித்து சஞ்சீவ்-ஆல்யா திருமணம் செய்துகொண்ட புகைப்படங்களும் வெளியானது. இவர்களுக்கு 2020 மார்ச் மாதம் 20ல் ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. சமீபத்தில் தனது குழந்தையின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுத்த புகைப்படத்தையும் இந்த தம்பதி பகிர்ந்துள்ளனர்.

கடந்த 2017ஆம் ஆண்டு இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் வெளிவந்த ஜூலியும் 4 பேரும் படத்தில் ஆல்யா நடித்திருந்தார். தொடர்ந்து 2018ல் ராஜா ராணி புகழ் சஞ்சீவுடன் என்னை மாற்றும் காதலே என்ற குறும்படத்தில் நடித்திருந்தார். இது சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றது.
எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆலியாவுக்கு பேஸ்புக், இன்ஸ்டகிராம் போன்றவற்றில் பாலோவர்ஸ் அதிகம்தான்.
இவருக்கு இன்ஸ்டாவில் மட்டும் 3 மில்லியன் பாலோவர்கள் உள்ளனர்.காதல் முறிவு, திருமணம், குழந்தை என ஒருபக்கம் இருந்தாலும் சீரியலில் தனது அபாரமான நடிப்பில் தொடர்ந்து நடித்து வந்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு சிறந்த கதாநாயகன் மற்றும் கதாநாயகிக்கான TEA விருது சஞ்சீவ் ஆலியாவுக்கு வழங்கப்பட்டது.
மேலும் தனது தனித்துவமான நடிப்பிற்காக behindwoods விருது, விஜய் டிவி விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளை ஆலியா பெற்றுள்ளார்.
தற்போது ராஜா ராணி 2 சீரியலில் நடிகர் சித்துவுடன் நடித்து வருகிறார். இந்த சீரியலில் மருமகள் கதாபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிர்களை கவர்ந்து வருகிறார். இந்த சீரியல் தற்போது 100 எபிஸோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
ராஜா ராணி தொடரில் நடித்து பல விருதுகளை வென்ற ஆலியா ராஜா ராணி 2 சீரியலுக்காகவும் விருது வாங்கியுள்ளார்.


சமீபத்தில் நடந்த 2021விஜய் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த மருமகளுக்கான விருது ஆலியா மானசாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிரிந்துகொண்டுள்ளார் ஆலியா.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Raja rani 2 serial actress alya manasa career highlights