யாரும்மா இந்த மாணவி... பள்ளிச் சீருடையில் விஜய் டிவி நடிகை வித்தியாச போட்டோஷூட்!
சமூக ஊடகங்களின் மூலம் பிரபலமாகி சின்னத்திரையில் நுழைந்தவர் நடிகை வைஷ்ணவி சுந்தர். இவர் முதன் முதலில் சன் டிவியில் வெளிவந்த ரன் என்ற சீரியலில்தான் அறிமுகமானார்.
சிறுமியாக இருந்தபோதே டிக் டாக் செய்தவர் இன்று விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றான ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வருகிறார். அவர் யார் வேறு யாரும் அல்ல, ராஜா ராணி 2 சீரியலில் பார்வதி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை வைஷ்ணவி சுந்தர்தான்.
Advertisment
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல் ஆரம்பத்தில் மெதுவாக சென்றலும் இப்போது சில மாதங்களாக விறுவிறுப்படைந்து ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. இந்த சீரியலில் சரவணனுக்கு தங்கையாக பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் வைஷ்ணவி சுந்தர்.
இந்த சீரியலில் ஹீரோயின் சந்தியா கதாபாத்திரத்தில் ஆல்யா மானசா நடிக்கிறார். ஹீரோ சரவணன் கதாபாத்திரத்தில் நடிகர் சித்து நடிக்கிறார். இவர்களுடன், பார்வதியாக வைஷ்ணவி சுந்தர், சிவகாமியாக பிரவீனா, சைவம் ரவி சுந்தரமாகவும், அர்ச்சனாவாக வி.ஜே.அர்ச்சனாவும் நடிக்கிறார்கள். முதலில் சுமாராக சென்றுகொண்டிருந்த ராஜா ராணி 2 சீரியல், இப்போது முதல் பாகத்தைப் போல சூடு பிடித்து விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.
ராஜா ராணி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் வைஷ்ணவி சுந்தர் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் சமூக ஊடகங்களிலும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். வைஷ்ணவி எப்போதும் சமூக ஊடகங்களில் டான்ஸ் பாடல் என வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
இந்த சூழலில்தான், நடிகை வைஷ்ணவி சுந்தர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகி இருக்கிறார்கள்.
சமீப ஆண்டுகளில், சிலர் டப்ஸ்மாஷ், டிக் டாக் வீடியோக்கள் மூலம் பிரபலமாகி அதன் பிறகு சின்னத்திரையில் நடிப்பதற்கான வாய்ப்பு பெற்று சின்னத் திரையில் நுழைந்துள்ளனர்.
அந்த வரிசையில், சமூக ஊடகங்களில் மூலம் பிரபலமாகி சின்னத்திரையில் நுழைந்தவர் நடிகை வைஷ்ணவி சுந்தர். இவர் முதன் முதலில் சன் டிவியில் வெளிவந்த ரன் என்ற சீரியலில்தான் அறிமுகமானார். இவருக்கு சின்னத் திரையில் நடிக்க வாய்ப்புகள் தொடர்ந்து வருகிறது. அதே நேரத்தில், சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களிடம் உரையாடி வருகிறார். அதே போல, வைஷ்ணவி சுந்தர் தனது புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார்.
நடிகை வைஷ்ணவி சுந்தர் பள்ளிக்கூடம் படிக்கும்போது, சீருடையில் இருந்த புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். ராஜா ராணி சீரியலில் வைஷ்ணவி சுந்தரை ஒரு நடிகையாக பார்த்து வந்த ரசிகர்ளுக்கு அவர் பள்ளி சீருடையில் இருக்கும் போட்டோவைப் பார்த்து இது ராஜா ராணி பார்வதியா என்று வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
வைஷ்ணவி சுந்தர் பிசியோதெரபி படித்திருக்கிறார். இருப்பினும், இவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையால் நடிக்க வந்துவிட்டார். வைஷ்ணவி சுந்தர் பிளஸ் டு படிக்கும்போதே டிக்டாக் வீடியோக்கள் செய்துவந்தார். பிசியோதெரபி படித்து முடித்தவுடன் வைஷ்ணவி வீட்டில் சினிமாவில் நடிப்பதற்கு அளித்தனர் என்று தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"