scorecardresearch

Vijay TV Serial: சமையல் போட்டியில் தோல்வியடைந்த ஆல்யா மானசா… ஆனால் பரிசு எப்படி வாங்கினார்?

சந்தியாவும் சரவணனும் நமக்கு பரிசு கிடைக்காது என்று கிளம்பிச்செல்ல தயாராகிறார்கள். அப்போதுதான் தொகுப்பாளர் அறிவிக்கிறார்.

Vijay TV Serial: சமையல் போட்டியில் தோல்வியடைந்த ஆல்யா மானசா… ஆனால் பரிசு எப்படி வாங்கினார்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல் ஒவ்வொரு நாளும் உணர்ச்சி பூர்வமான நிகழ்வுகளுடன் விறுவிறுப்பான திருப்பங்களையும் பரபரப்பான கட்டங்களையும் சந்தித்துவருகிறது. அதை சுவாரஸ்யம் குறையாமல் இங்கே காணலாம். இந்த சீரியலில், ராஜா ராணி சீரியல் முதல் சீசனில் நடித்த நடிகை ஆல்யா மானசா ஹீரோயின் சந்தியா கதாபாத்திரத்திலும் நடிகர் சித்து ஹீரோவாக சரவணன் என்கிற கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள்.

ராஜா ராணி 2 சீரியலில் சமையல் போட்டி நடைபெறும் இடத்துக்கு சந்தியாவும் சரவணனும் வந்து சேர்கிறார்கள். பதற்றமடையாமல் செய்ய வேண்டும் என்று சந்தியாவுக்கு சரவணன் அட்வைஸ் செய்கிறான்.

சமையல் போட்டி நிகழ்ச்சியின் தொகுப்பாளர், போட்டி விதிமுறைகளைக் கூறுகிறார். அதில், சமையல் போட்டியில் கலந்துகொள்பவர்கள்தான் சமைக்க வேண்டும். ஏதாவது 2 டிஷ்களை மட்டும் செய்ய வேண்டும். சமையல் போட்டியில் கலந்துகொள்பவர்களுக்கு அவர்களுடைய குடும்பத்தினர் தூரத்தில் இருந்து டிப்ஸ்களை சொல்லலாம். ஆனால், போட்டியாளர்தான் சமைக்க வேண்டும். சமையல் போட்டி என்றால், ஒருவருக்குதான் பரிசு கிடைக்கும். அது மட்டுமில்லாமல் 2வது நபருக்கு ஒரு சிறப்பு பரிசு வழங்கப்படும். அதை போட்டி நடுவர்கள் யாருக்கு வழங்கப்படும் என்பதை அறிவிப்பார்கள் என்று கூறுகிறார். இதையடுத்து, தொகுப்பாளர் சமையல் போட்டி நடுவர்களை அறிமுகம் செய்து வைக்கிறார்.

இதையடுத்து, சமையல் போட்டி நிகழ்ச்சி தொகுப்பாளர், போட்டியில் கலந்துகொள்கிறவர்களை சமைப்பதற்கு அழைக்கிறார். சந்தியா சமையல் போட்டியில் சமைக்கிற இடத்துக்கு செல்கிறாள். அந்த நேரம்தான், சந்தியாவின் மாமியார் சிவகாமியும் மாமனார் சுந்தரமும் அவசர அவசரமாக சமையல் போட்டி நடக்கும் இடத்துக்கு சந்தியாவை உற்சாகப்படுத்த வருகிறார்கள்.

சிவகாமி தனது மருமகள் சந்தியா சமையல் போட்டியில் எப்படி சமைக்கப்போகிறாளோ என்ற பதற்றத்துடன் இருக்கிறார். சுந்தரம் பதற்றப்படாத, நீ டென்ஷன் ஆனால், உன்னை பார்த்து டென்ஷன் ஆகிடுவாள். அதனால், சிரித்த மாதிரி இரு என்று கூறுகிறார். சிவகாமியும் டென்ஷனை மறைத்து கூலாக இருக்க முயற்சி செய்கிறார். ஆனால், தனது பக்கத்து வீட்டு ஃபிரெண்ட் கவிதா, அவளுடைய மருமகள் சமையல் போட்டியில் ஜெயித்துவிட்டால், தன்னை கேலி செய்வாள் என்று சுந்தரத்திடம் கூறுகிறார். ஏற்கெனவே அவளுடைய மருமகள் ஜெயந்தி யாரையும் மதிக்கமாட்டாள், சமையல் போட்டியில் வேறு ஜெயித்துவிட்டால் அதற்கு பிறகு அவளுக்கு தலையில் கொம்பு முளைத்து இன்னும் திமிர் பிடித்துவிடும் என்று கூறுகிறார்.

சமையல் போட்டி நடைபெறும் இடத்தில் டென்ஷனாக இருக்கிற் சந்தியாவை, சரவணன் ரிலாக்ஸாக இருக்கச் சொல்கிறான். சுந்தரம் கட்டை விரல்களை உயர்த்தி சந்தியாவுக்கு ஆல் தி பெஸ்ட் என்று வாழ்த்து சொல்கிறார். சரவணனையும் வாழ்த்து சொல்ல சொல்கிறார். பிறகு, சரவணன், ஆல் தி ஃபர்ஸ்ட் என்று வாழ்த்து கூறுகிறான்.

இதையடுத்து சமையல் போட்டி தொடங்குகிறது. போட்டி தொடங்கியவுடன் போட்டியாளர்கள் எல்லோரும் தாங்கள் செய்ய உள்ள டிஷ்க்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு வருகிறார்கள். பின்னர் சமைக்கத் தொடங்குகிறார்கள். சந்தியா காலி ஃபிளவர் பக்கோடா மற்றும் குலப் ஜாமூன் இரண்டையும் செய்கிறார். குலாப் ஜாமூன் செய்ய மாவு பிசையும்பொது சரவணன் தண்ணீர் அதிகம் ஊற்றக்கூடாது லேசாக ஊற்ற வேண்டும் என்று டிப்ஸ் தருகிறான். ஒரு வழியாக சந்தியா காலி ஃபிளவர் பக்கோடா, குலாப் ஜமூன் செய்து முடிக்கிறாள். பொருட்களை செய்து முடிக்கும் சந்தியா அவற்றை ஸ்டவ்வில் இருந்து இறக்கி வைக்கும்போது அவளுடைய சேலை ஸ்டவ்வில் எரிந்துகொண்டிருக்கிற நெருப்பில் பட்டு கருகுகிறது. இதைப்பார்த்த சரவணன் பாய்ந்து சென்று சேலையில் பற்றிய லேசான தீயை அணைக்கிறான். சிவகாமியும் சுந்தரமும் பதற்றத்துடன் அருகே செல்கிறாள்.

இதையடுத்து, சமையல் போட்டி நடுவர்கள், போட்டி முடிவை அறிவிக்க சுவைத்து பார்க்க வருகிறார்கள். சந்தியாவின் காலி ஃபிளவர் பக்கோடாவை சுவைத்து பார்க்கும் ஒரு பெண் நடுவர் நன்றாக இருப்பதாகப் பாராட்டுகிறார். ஆனால், குலாம் ஜாமூன் நன்றாக இல்லை என்று கூறி செல்கிறார். அதனால், சந்தியா மேலும் டென்ஷன் ஆகிறாள். மற்றவர்களின் உணவை சுவைத்து பார்க்கும் நடுவர்கள் நன்றாக இருப்பதாகக் கூறுகிறார்கள். இதனால், பரிசு யார் சீரியலில் விறுவிறுப்பு கூடுகிறது.

தொகுப்பாளர் சமையல் போட்டி முடிவுகலை அறிவிக்கிறார். சமையல் போட்டியில் முதல் பரிசு ஜெயந்திக்கு அறிவிக்கிறார். கவிதா தனது மருமகளுக்கு பரிசு அறிவிக்கப்பட்டதால் சந்தோஷப்படுகிறார். ஆனால், சிவகாமி சமையல் போட்டியில் தனது மருமகள் சந்தியா தோல்வியடைந்ததால், இந்த ஜென்மத்துல என் மருமகள்கள் ஜெயிக்கமாட்டார்கள் என்று போட்டி நடைபெறும் இடத்தை விட்டு கிளம்பிச் செல்கிறார்.

இதையடுத்து, தொகுப்பாளர், ஏற்கெனவே சொன்னது போல, முதல் பரிசு அறிவித்தாகிவிட்டது. இதற்கு அடுத்து, சிறப்பு பரிசு அறிவிக்கப்பட உள்ளது என்று கூறுகிறார். அப்போது, சந்தியாவும் சரவணனும் நமக்கு பரிசு கிடைக்காது என்று கிளம்பிச்செல்ல தயாராகிறார்கள். அப்போதுதான் தொகுப்பாளர், இந்த போட்டியில் தோற்றாலும், போட்டியாளருக்கு குடும்பத்தினர் அளித்த ஆதரவு மற்றும் ஊக்கப்படுத்துதலை வைத்து இந்த சிறப்பு பரிசு அறிவிக்கப்படுகிறது. நடுவகள் சிறப்பு பரிசை அறிவிப்பார்கள் என்று கூறுகிறார். அதன்படி நடுவர்கள் சிறப்பு பரிசை சந்தியாவுக்கு அளிக்கிறார்கள். சந்தியாவும் சரவணனும் மேடைக்கு சென்று சிறப்பு பரிசை பெற்றுக்கொள்கிறார்கள். சந்தியாவும் சரவணனும் சந்தோஷமாக இருக்கிறார்கள். அப்போது, தொகுப்பாளர், போட்டியின்போது, சந்தியா உங்களுக்கு உங்களுடைய கணவர் சின்னசின்ன டிப்ஸ்களை சொல்லி உங்களுக்கு ரொம்ப சப்போர்ட்டிவாக இருந்தார். இப்படிதான் இருக்க வேண்டும். இந்த சிறப்பு பரிசு வாங்கியது குறித்து சந்தியாவிடம் கருத்து கேட்கும்போது, எல்லாமே எனது கணவர் தான் சொல்லிக்கொடுத்தார். அவருக்கு தான் இந்த பரிசு என்று கூறுகிறார். ஆனால், சரவணன் நான் என்னதான் சொல்லிக்கொடுத்தாலும் சமையல் செய்தது சந்தியாதான். அதனால், அவர் பரிசு வாங்குவதற்கு நான் ஒன்றுமே செய்யவில்லை. அதனால், இந்த பரிசு முழுக்க முழுக்க அவருக்குதான் என்று கூறுகிறான்.

இதைக்கேட்ட தொகுப்பாளர், கணவன் மனைவி என்றால் ஒற்றுமையாக இப்படிதான் இருக்க வேண்டும். நல்ல ஜோடி என்று கூறுகிறார். இதைக்கேட்ட சரவணன், சந்தியாவுக்கு மட்டும் கேட்கும் விதமாக இதையெல்லாம் கேட்டு மனசை குழப்பிக்கொள்ளாதிர்கள். நம்ம மனதில் என்ன இருக்கிறது என்பது நமக்கு தெரியாதா? ரெண்டு பேருக்கும் செட் ஆகாது என்று கூறுகிறான். இதைக் கேட்டு சந்தியா மிகவும் கவலை அடைகிறாள். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Raja rani 2 serial today episode alya manasa loose in cooking competition but gets special prize

Best of Express