/tamil-ie/media/media_files/uploads/2021/09/raja-rani-2-serial-sep-1.jpg)
Raja Rani 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில், இன்று சந்தியா, சரவணனிடம் லஞ்சம் கேட்ட போலி போலீஸ்காரர்களை உண்மையான போலீஸ்காரர்களிடம் பிடித்துக் கொடுத்து மேலும் ஒரு சாகசம் செய்கிறாள். அதனால், ஒரிஜினல் போலீஸ்காரர்கள் சந்தியாவைப் பாராட்டுகிறார்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல், ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இந்த சீரியலில் ஹீரோயின் சந்தியா கதாபாத்திரத்தில் ஆல்யா மானசா நடிக்கிறார். ஹிரோ சரவணன் கதாபாத்திரத்தில் நடிகர் சித்து நடிக்கிறார். இவர்களுடன், பார்வதியாக வைஷ்ணவி சுந்தர், சிவகாமியாக பிரவீனா, சைவம் ரவி சுந்தரமாகவும், அர்ச்சனாவாக வி.ஜே.அர்ச்சனாவும் நடிக்கிறார்கள். முதலில் சுமாராக சென்றுகொண்டிருந்த ராஜா ராணி 2 சீரியல், இப்போது முதல் பாகத்தைப் போல சூடு பிடித்து விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.
ராஜா ராணி 2 சீரியலில் இன்றைய எபிசோடில்,
நல்லா படிச்ச பொண்ணுக்கு இப்படி ஒரு படிக்காத மாப்பிள்ளையா என்று அந்த புரபஸர் சொன்னதை நினைத்துகொண்டு சரவணன் ஸ்கூட்டர் ஓட்டிக்கொண்டு செல்கிறான். அந்த புரபஸர் சொன்னதுக்கு சந்தியா இல்லை என்று ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. அவங்க மனசுலயும் இது இருக்குது. இல்லைனா, விவாகரத்து பத்திரம் வாங்கிக்கொண்டு வந்து பத்திரமாக வைத்துக்கொண்டிருப்பாங்களா என்று சரவணன் மனதில் நினைக்கிறான்.
ஸ்கூட்டரில் உட்கார்ந்து வரும் சந்தியா, இது புரபஸர் வீடுணு தெரிந்திருந்தால் வந்திருக்கவே மாட்டேன், தேவையில்லாமல் இவருக்குதான் மனசு கஷ்டம், முகமே ஒரு மாதிரி வாடி போச்சு என்று மனதில் நினைத்துக்கொள்கிறாள்.
சரவணன், “இவர் வாய் விட்டு கேட்டுவிட்டார், மற்றவர்கள் எத்தனை பேர் கேட்காமல் இருக்கிறார்களோ, வாழ்நாள் முழுக்க எத்தனை பேர்கிட்ட எத்தனை கேள்வி கேட்கணுமோ தெரியல, நாம எடுத்த முடிவு சரிதான். பார்வதி நிச்சயம் முடிந்த பிறகு, சந்தியா அவங்க விருப்பம் போல பறக்கட்டும், நான் எதுக்கு அவங்க சிறகை ஒடைக்கணும்” என்று நினைத்துக்கொண்டு வருகிறான்.
புரபஸர் அப்படி சொன்னதால் சரவணன் பாதிக்கப்பட்டதை சரி செய்ய வேண்டும் என்று சந்தியா முயற்சிக்கிறாள். ஆனால், சரவணன், பரவாயில்லை என்று சொல்லிக்கொண்டு வருகிறான்.
சிறிது தூரம் போன பிறகு, வண்டியை நிறுத்தும் சரவணன், ஒரு இடத்தில் பணம் வசூல் பண்ணிவிட்டு வருகிறேன். நீங்கள் இங்கே இருந்து வீட்டுக்கு ஆட்டோவில் போய்விடுங்கள் என்று கூறுகிறான்.
“ஏங்க இப்படி, பண்றீங்க, உங்க கூடவே வருகிறேன்.” என்று சந்தியா கூறுகிறாள். ஆனால், சந்தியா சொல்வதை கேட்காத சரவணன், அந்த வழியாக வரும் ஒரு ஆட்டோவை நிறுத்தி இந்த ஆட்டோவில் வீட்டுக்கு போங்க, என்று பணத்தைக் கொடுத்து ஆட்டோக்காரரிடம் தெற்கு ரத வீதி, பஸ் ஸ்டாண்ட் விட்டுவிடுங்கள் என்று கூறி சந்தியாவை அனுப்பி வைக்கிறான். சரவணன், ஏன் இப்படி செய்கிறான் என்று வருத்தத்துடன் யோசிக்கிறாள்.
/tamil-ie/media/media_files/uploads/2021/09/New-Project-60.jpg)
ஆட்டோவில் செல்லும் சந்தியா புரபஸர் சொன்னதை நினைத்துப் பார்க்கிறாள். படித்த ஆண்கள் படிக்காத பெண்களை கல்யாணம் பண்ணிக்கொண்டிருந்தால் அவர்களை யாரும் ஏன் படிக்காத பெண்ணை கல்யாணம் பண்ணிக்கொண்டிருக்கிறாய் என்று கேட்பதில்லை. ஆனால், ஒரு படித்த பெண் படிக்காத ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கொண்டிருந்தால் மட்டும் ஏன் இப்படி கேள்வி கேட்கிறார்கள் என்று நொந்துகொள்கிறார்கள். இதில் படித்தவர்கள் படிக்காதவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள் என்று சலித்துக்கொள்கிறாள்.
திடீரென ஆட்டோ நின்றுவிடுகிறது. ஆட்டோக்காரர் சிறிது நேரத்தில் சரி செய்துவிடுகிறேன் என்று பின்னால் சென்று எஞ்ஜினில் ஆயில் பிரச்னையை சரி செய்கிறார். சரவணன் இப்படி பாதி வழியிலேயே ஆட்டோவில் போய்விடு என்று சொன்ன வருத்தத்தோடு ஆட்டோ வேறு நின்றுவிட்டதால் சந்தியா வருத்தத்தில் கண் கலங்குகிறாள்.
ஆட்டோவில் அமர்ந்திருக்கும் சந்தியா கவனிக்காத நேரத்தில், சரவணனும் ஆட்டோ நின்றுவிட்டதைப் கவனிக்காமல் ஸ்கூட்டரில் சென்றுவிடுகிறான். ஆட்டோ சரி செய்யப்பட்ட பிறகு மீண்டும் ஆட்டோ புறப்படுகிறது. அதற்குள் முன்னே சென்ற சரவணனை அங்கே வழியில் ஒரு போலீஸ் வாகனம் வழி மறிக்கிறது. சரவணனிடம் டூ வீலர் லைசென்ஸ், வண்டி ஆர்சி புக், இன்சூரன்ஸ் கேட்கிறார்கள். சரவணனும் எடுத்துக்கொடுக்கிறான். அதை வாங்கிப்பார்த்த இன்ஸ்பெக்டர், இன்சூரன்ஸ் முடிந்து 2 மாசம் ஆகிறது. கேஸ் போட்டா, கோர்ட்ல 5 ஆயிரம் ஃபைன் கட்டணும். இங்கேயே இந்த பிரச்னையை முடிச்சுக்கலாம் என்றால் 2 ஆயிரம் கொடுத்தால் போதும் என்று அந்த போலீஸ்காரர் கேட்கிறார். சரவணன் போலீஸ்காரர் 2 ஆயிரம் கேட்டதால் ஷாக் ஆகிறான். வண்டி இன்சூரன்ஸ் பணம்கூட அவ்வளவு இல்லைங்களே, போன உடனே இன்சூரன்ஸ் கட்டிவிடுறேன் சார் என்று கெஞ்சுகிறான்.
ஆனால், அந்த போலீஸ்காரர் 2 ஆயிரம் கொடு இல்லைனா. வண்டியை தூக்குயா, ஃபைன் கட்டிட்டு ஸ்டேஷன்ல வந்து வண்டியை எடுத்துக்கோ என்று இன்ஸ்பெக்டர் மற்ற போலீஸ்காரர்களிடம் கூறுகிறார். சரவணன் என்ன செய்வதென்று தெரியாமல் 2 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக இன்ஸ்பெக்டரிடம் கொடுக்கிறான். அப்போது, ஒரு கை திடீரென கொடுக்க வேண்டாம் என்று தடுக்கிறது. அது வேறு யாரும் அல்லா சந்தியாதான் ஆட்டோவில் வந்து கொடுக்க வேண்டாம் என்று தடுக்கிறாள். எதற்கு லஞ்சம் கொடுக்கிறீங்க என்று கேட்கிறாள்.
இதைப் பார்த்து போலீஸ் இன்ஸ்பெக்டர் டென்ஷன் ஆகிறார். யாரும்மா நீ என்று விசாரிக்கிறார். அதற்கு சரவணன் இது என்ன பெரிய வம்பா போச்சே என்று இல்லை சார், இது என் வொய்ஃப், கொஞ்சம் பொறுத்துக்கோங்க என்று கூறுகிறான். ஆனால், சந்தியா லஞ்சம் கொடுப்பதும் தவறு, வாங்குவதும் தவறு, நாம் உழைச்ச பணத்தை இப்படி லஞ்சமா கொடுக்கலாமா, ஒரு நூறு ரூபாய் சம்பாதிக்கிறதுக்கு நாம் எவ்வளவு கஷ்டப்படுகிறோம். ஆனால், இவங்க கிட்ட 2 ஆயிரம் லஞ்சமா தரணுமா என்று சரவணனிடம் கேள்வி கேட்கிறாள். சரவணன், ஏங்க, இன்சூரன்ஸ் முடிஞ்சு 2 மாசம் ஆகிட்டு இருக்குது. நான் கவனிக்கல. கேஸ் போட்டா 5 ஆயிரம் ஃபைன் கட்டணும் என்று சொல்கிறான்.
அதற்கு சந்தியா, இன்சூரன்ஸ் இல்லைனா ஒன்னும் கொலை குற்றம் இல்லை. ஃபைன் கட்டிட்டு போகலாம். ஃபைன் எவ்வளவு என்று கேட்கிறாள். இதைக் கேட்டு கோபடமையும் இன்ஸ்பெக்டர் , உனக்கு அவ்வளவு திமிரா என்று கேட்டுவிட்டு, ஒரு போலீஸ்காரரை கூப்பிட்டு அந்த கஞ்சா மூட்டையை எடுத்துவா, இவங்க வண்டியில வை கஞ்சா கடத்துனாங்கனு கேஸ் போடு, கஞ்சா கடத்தல் தடுப்பு போலீஸ்க்கு போன் போடு என்று கூறுகிறான்.
/tamil-ie/media/media_files/uploads/2021/09/New-Project-56.jpg)
அப்போதுதான், சந்தியாவுக்கு அந்த போலீஸ்காரர்கள் மீது ஒரு சந்தேகம் வருகிறது. இன்ஸ்பெக்டர் போலீஸ் பேட்ச்சை வலதுபக்கத்துக்கு பதிலாக மாற்றி இடதுபக்கத்தில் குத்திக்கொண்டிருக்கிறார். ஒரு போலீஸ்காரர் பெல்ட்டில் சின்னத்தை தலைகீழாக அணிந்துகொண்டிருக்கிறார். இதைப் பார்த்த சந்தியாவுக்கு சந்தேகம் வருகிறத். உடனடியாக, நீங்க போலீஸ்தானே உங்க அடி கொடுங்கள் என்று கேட்கிறாள். இதைக் கேட்டு, மேலும் கோபமடையும் அந்த இன்ஸ்பெக்டர் போலீஸ் கிட்டயே ஐடி கார்டு கேட்கிறயா, இரு உங்களை கஞ்சா கடத்தல் கேஸ்ல உள்ள அனுப்புறேன். இன்சூரனஸ் இல்லாததற்கு ஃபைன்னோட போயிருக்கும் இப்போது, கஞ்சா கடத்துனதுக்கு 2 பேரும் 2-3 வருஷம் ஜெயில்ல இருக்கணும் என்று மிரட்டுகிறான்.
இதைக்கேட்டு சரவணன், பயப்படுகிறான். சந்தியாவை இருங்க என்று அமைதியாக்க முயற்சிக்கிறான். போலீஸ்காரங்களை பகைச்சுகிட்டு கடை நடத்த முடியாது என்று கூறுகிறான். ஆனால், சந்தியா தனது செல்போனை எடுத்து அவர்களை போட்டோ எடுக்கிறாள். அதோடு, போலீஸ்காரர்களுக்கு கேட்காத அளவில், மெதுவாக போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு போன் செய்து தகவல் சொல்கிறாள்.
சந்தியா லஞ்சம் தரமுடியாது என்று சொன்னதோடு, ஐடி கேட்டதால் டென்ஷன் ஆன இன்ஸ்பெக்டர் உன்ன என்ன செய்கிறேன் பார் என்று மிரட்டுகிறான். சிறிது நேரத்துக்குள் போலீஸ் வாகனங்கள் சைரன் ஒலியுடன் வருகின்றன. இதைப் பார்த்த அங்கே இருந்த போலீஸ்காரர்கள் ஓட முயற்சிக்கிறார்கள். சரவணன் என்ன நடக்கிறது என்று புரியாமல் திகைத்து நிற்கிறான். அதற்குள் 4 பக்கமும் போலீஸ் வாகனங்களில் வந்த உண்மையான போலீஸ்காரர்கள் அங்கே அதுவரை வாகனத்தை மறித்து லஞ்சம் கேட்டு மிரட்டிக்கொண்டிருந்த போலீஸ் போலீஸ்காரர்களை மடக்கிப் பிடித்து அடிக்கிறார்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2021/09/raja-rani-2-serial-sep-1-1.jpg)
நம்ம தென்காசி வட்டத்துல 2 வருஷமா நம்மள மாதிரி ஒரிஜினல் போலீஸ்காரங்க மாதிரி இவனுங்கதான் சார் பப்ளிக் வண்டிகளை மடக்கி ஏமாத்தி லஞ்சம் வாங்கிட்டு இருந்தவனுங்க, இன்று வசமா மாட்டிகிட்டானுங்க என்று ஒரு போலீஸ்காரர் சொல்கிறார். இதைப் பார்த்து, சர்வணன் மிரண்டு போகிறான்.
சந்தியா, இவர்கள்தான் லஞ்சம் கேட்டு மிரட்டிய போலி போலீஸ்காரர்கள், நான்தான் போன் பண்ணேன் என்று ஒரிஜினல் போலீஸ்காரர்களிடம் சொல்கிறாள். போலீஸ் வேடம் போட்டு லஞ்சம் கேட்டு மிரட்டிய கும்பலை பிடித்த ஒரிஜினல் போலீஸ்காரர்கள் சந்தியாவுக்கு நன்றி சொல்கிறார்கள். இது நிஜமாகவே பெரிய விஷயம் சந்தியா என்று போலீஸ்காரர்கள் பாராட்டுகிறார்கள். எப்படி இவங்களை டூப்ளிகேட் போலீஸ்ணு கண்டுபிடித்தீர்கள் என்று ஒரிஜினல் போலீஸ்காரர்கள் கேட்டதற்கு, சந்தியா, “இவர் பேட்சை மாற்றி குத்திக்கொண்டிருந்தார். அவர் பெல்ட் சின்னத்தை தலைகிழாக அணிந்திருந்தார்” என்று சொல்கிறாள். சந்தியாவின் தைரியத்தையும் அறிவையும் பாராட்டிய போலீஸ்காரர்கள், உங்களுக்கு ஏதாவது உதவி தேவைனா, டி.எஸ்.பி ஆஃபீஸ்க்கு வாங்க, என்ன உதவினாலும் கேளுங்க என்று சொல்லிவிட்டு, சந்தியாவிடம் போன் நம்பர் வாங்கிக்கொண்டு போலீஸ்காரர்கள் அந்த போலி கும்பலை பிடித்துகொண்டு புறப்படுகிறார்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2021/09/New-Project-61.jpg)
அவர்கள் போன பிறகு, சரவணன், அங்கே நடந்த விஷயத்தை நம்பவே முடியவில்லை. நடந்தது எல்லாம் ஒரு கனவு போல இருக்குதுங்க என்று சந்தியாவிடம் சொல்கிறான். சந்தியா நான்தான் சொன்னேன் இல்லை. லஞ்சம் கொடுக்ககூடாதுனு என்று கூறுகிறாள். எப்படி இங்களை போலி போலீஸ்ணு கண்டுபிடிச்ச என்று கேட்கும்போது, அந்த இன்ஸ்பெக்டர் விசில் கையிறை பாக்கெட்டில் வைப்பதற்கு பதில் சட்டை பட்டனில் கட்டியிருந்தார். எல்லாமே மாறி மாறி இருந்தது. அதான் அவர்கள் போலி போலீஸ்ணு கண்டுபிடித்தேன் என்று கூறுகிறாள். இதைக்கேட்டு மிரட்சியாகும் சரவணன், இவ்வளவு திறமையானவங்க நம்மளை கல்யாணம் பண்ணிகிட்டு இப்படி இருக்காங்க. இவங்க நம்மளவிட்டு போவதுதான் சரி என்று மனதுக்குள் சொல்லிக்கொள்கிறான். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.